Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கமலிடம் பாடம் கற்குமா தமிழ் தலைவாஸ்?

சென்னை: புரோ கபடி லீக் போட்டியில் சென்னையில் தான் சந்தித்த 3 ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில், தெலுகு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் சீசன் 5 ஆட்டங்கள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 12 மாநிலங்களை குறிக்கும் இந்த சீசன் ஆட்டங்கள், அந்தந்த மாநிலத்தில் நடந்து வருகிறது.

அதன்படி, தற்போது சென்னையில் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 6 ஆட்டங்கள் முடிந்துள்ள. மேலும் 5 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

தோல்வியை சந்திக்காத குஜராத்

தோல்வியை சந்திக்காத குஜராத்

இந்த சீசனில், சொந்த மண்ணில் நடந்த எந்தப் போட்டியிலும் தோற்காத ஒரே அணி, குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணிதான். அது உள்ளூரில் நடந்த 5 போட்டிகளில் வெற்றி, ஒன்றில் டிரா செய்தது. அதே நேரத்தில், தபாங்க் டெல்லி அணி, உள்ளூரில் நடந்த 6 போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

இன்று இரவு தபாங்

இன்று இரவு தபாங்

இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் தபாங்க் டெல்லி அணியும், குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியும் மோத உள்ளன. சென்னையில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

பரிதாபத்தில் தமிழ் தலைவாஸ்

பரிதாபத்தில் தமிழ் தலைவாஸ்

இந்த சீசனின் 100வது ஆட்டத்தில், புனேரி பல்தான் 33-20 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது. அடுத்தது, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் 27-26 என்ற கணக்கிலும் யு மும்பா அணியுடம் 33-30 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது

தெலுங்கு டைட்டன்ஸ்

தெலுங்கு டைட்டன்ஸ்

இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி சந்திக்கிறது. வெற்றியின் ரகசியம் தெரிந்தவர் கமல் என்று ரஜினி கூறியுள்ளார். தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக கமல் உள்ளார். அவரிடம் வெற்றியின் ரகசியத்தை அறிந்து, தொடர் தோல்விகளுக்கு தமிழ் தலைவாஸ் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஜெயிக்குமா

ஜெயிக்குமா

நாளை நடக்கும் ஆட்டத்தில் யுபு யோத்தா அணியுடனும், 5ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணியுடனும் தமிழ் தலைவாஸ் விளையாட உள்ளது.

குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியின் சாதனையை தொட முடியாது, அதே நேரத்தில் தபாங்க் டெல்லி வழியில் உள்ளூரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி என்பதை தவிர்க்க முடியும். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.

Story first published: Tuesday, October 3, 2017, 10:09 [IST]
Other articles published on Oct 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+