உலகக் கோப்பை கபடி போட்டி- தொடக்க போட்டிகளில் இந்தியா வெற்றி
பாட்டியாலா: பஞ்சாபில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
பஞ்சாபில் கடந்த 30-ந் தேதி 4வது உலகக் கோப்பை கபடி போட்டி தொடங்கியது. வரும் 14-ந் தேதி வரை நடைபெறவுள்ள இப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆடவர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இங்கிலாந்து, ஸ்பெயின், டென்மார்க், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சியரா லியோன், கென்யா ஆகிய 12 அணிகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் பிரிவு அணிகள்
மகளிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், டென்மார்க், அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, கென்யா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

பட்டம் வெல்லும் அணிக்கு..
ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 கோடி மற்றும் 51 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மகளிர் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.1 கோடியும் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.51 லட்சமும் ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

ஆடவர் பிரிவு- இந்தியா தொடக்க வெற்றி
ஆடவர் பிரிவு தொடக்க ஆட்டத்தில் இந்தியா 59-31 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது..

மகளிர் பிரிவிலும் இந்தியா வெற்றி
மகளிர் பிரிவு போட்டியில் இந்தியா 44-12 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications