Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 10 நாளில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் - இந்தியா இதுவரை எத்தனை தங்கம் வென்றுள்ளது தெரியுமா?

டெல்லி: 2024 ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடர் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. ஜூலை 26 அன்று அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் தொடர் துவங்க உள்ளது. அதற்கு முன் ஜூலை 24 அன்று சில போட்டிகள் மட்டும் நடைபெறும்.

இந்த முறை இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ளனர். கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை மட்டுமே வென்று இருந்தது. பதக்கப் பட்டியலில் இந்தியா 48வது இடத்தை மட்டுமே பிடித்தது.

Paris Olympics 2024 2024

இந்தியா ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்கள் வெல்வதில்லை என்ற புகார் ஒவ்வொரு முறையும் கூறப்பட்டு வருவதுண்டு. அதிலும் குறிப்பாக தங்கப் பதக்கம் வெல்வதில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருந்து இருக்கிறது. இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா மொத்தம் 10 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்று இருக்கிறது. அதிலும் 8 தங்க பதக்கங்கள் ஹாக்கி விளையாட்டில் மட்டுமே கிடைத்தன. அவை 1928 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் கிடைத்தவை.

அதன் பின் ஹாக்கியிலும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. ஹாக்கி அல்லாது மற்ற விளையாட்டுகளில் இரண்டு முறை மட்டுமே இந்தியா தங்கம் வென்றுள்ளது. 2008 பீஜிங் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். அடுத்து 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

அதற்கு முன்னதாக 1928 முதல் 1956 வரை ஆறு முறை தொடர்ந்து ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்றது. அதன் பின் 1964 மற்றும் 1980 இல் இந்தியா தங்கம் வென்றது. இந்த நிலையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக 2021இல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா நிச்சயமாக இந்த முறையும் ஈட்டி எறிதலில் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Monday, July 15, 2024, 14:52 [IST]
Other articles published on Jul 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+