Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில்தேவ் முதல் ஹர்பஜன் வரை... இந்தியா- தென் ஆப்பிரிக்கா போட்டி பற்றி அறிய வேண்டிய 10 தகவல்கள்!

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் விளையாட உள்ளது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த வார போட்டியில் எளிதாக வென்ற இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி சற்று கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான போட்டிக்கு முன்பாக சில ஹைலைட்ஸ்களை பார்த்துக்கொள்ளலாமே..

இந்தியா வென்றதில்லை

இந்தியா வென்றதில்லை

இந்தியா இதுவரை உலக கோப்பை போட்டிகளில் 3 முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதியுள்ளது. அனைத்திலும் தென் ஆப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது. 1992, 1999 மற்றும் 2011 ஆகிய மூன்று உலக கோப்பைகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோத வாய்ப்பு கிடைத்தன. அதன்பிறகு இப்போது நான்காவது முறையாக மோத உள்ளன.

சச்சின் இல்லாத முதல் போட்டி

சச்சின் இல்லாத முதல் போட்டி

கடந்த மூன்று முறையுமே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளின்போது இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் இருந்தார். சச்சின் இல்லாமல் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளப்போவது இதுதான் முதல்முறை.

சதம் அடித்த ஒரே வீரர்

சதம் அடித்த ஒரே வீரர்

சச்சின் மட்டுமே உலக கோப்பை போட்டியொன்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடிந்த இந்திய வீரராகும். 2011 உலக கோப்பையின்போது சச்சின் 111 ரன்கள் விளாசினார். இருப்பினும் இந்தியா தோற்றது.

அதிக ரன்களும் சச்சினுக்கே

அதிக ரன்களும் சச்சினுக்கே

உலக கோப்பைகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொத்தம் (3 போட்டிகளில் சேர்த்து) 153 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர் சச்சினாகும்.

ஹர்பஜன்சிங்

ஹர்பஜன்சிங்

2011 உலக கோப்பையில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்திய பவுலர் ஒருவரின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெஸ்ட் சாதனையாகும்.

கல்லீஸ் பெஸ்ட்

கல்லீஸ் பெஸ்ட்

தென் ஆப்பிரிக்காவின் ஜேக் கல்லீஸ் இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 165 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இந்த உலக கோப்பையில் விளையாடவில்லை.

யாரையும் சதம் அடிக்கவிட்டதில்லை

யாரையும் சதம் அடிக்கவிட்டதில்லை

தென் ஆப்பிரிக்காவின் எந்த ஒரு பேட்ஸ்மேனும் இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டிகளில் சதம் அடித்தது கிடையாது. 1999ல் கல்லீஸ் அடித்த 96 ரன்கள்தான் அந்த அணி வீரர் ஒருவரின் பெஸ்ட்.

ஸ்டெயின் அச்சுறுத்தல்

ஸ்டெயின் அச்சுறுத்தல்

டேல் ஸ்டெயின் 2011 உலக கோப்பையின்போது 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அந்த அணி பவுலர் ஒருவரின் பெஸ்ட் ஆகும்.

நம்ம குரு அங்க போயிட்டாரே..

நம்ம குரு அங்க போயிட்டாரே..

2011ல் இந்தியா உலக கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன், இப்போது தனது நாட்டு அணியின் ஆலோசகராக உள்ளார்.

கபில் எவர்கிரீன்

கபில் எவர்கிரீன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி பேட்டிங் சாதனை வைத்துள்ளது கபில்தேவ் ஆகும். அவர் 1992 உலக கோப்பையின்போது, 29 பந்துகளில் 42 ரன்களை எடுத்து, 144.82 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்.

Story first published: Wednesday, February 18, 2015, 14:31 [IST]
Other articles published on Feb 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+