ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 4 மாத கர்ப்பிணி.. 7 போட்டிகளில் விடாப்பிடி போராட்டம்..மெய்சிலிர்ந்த மக்கள்
அமெரிக்கா: ஒலிம்பிக்கிற்கான, அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகளில் 4 மாத கர்ப்பிணி வீராங்கனை மன தைரியத்துடன் கலந்துக்கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கவுள்ளது.
இதற்கான வீரர், வீராங்கனைகளின் தேர்வுகளுக்காக அமெரிக்காவில் நடைபெற்று வரும் தகுதிச்சுற்று போட்டியில் தான் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி
அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹெப்டத்லெட்
வீராங்கனை லிண்ட்சே ஃபலாச். இவர் கடந்த 2012 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள முயற்சித்து தோல்வியை சந்தித்தார். இதனால் கடந்த 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கடைசி முறையாக முயற்சி செய்து பார்த்த பின்னர் விளையாட்டில் இருந்து விலகிவிடலாம் என எண்ணியுள்ளார். ஆனால் கொரோனா காரணமாக கடந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் தற்போது தான் நடைபெறவிருக்கிறது.

4 மாத கர்ப்பம்
இந்நிலையில் இதற்கான தகுதிச்சுற்று போட்டிக்கு அழைக்கப்பட்ட நிலையில் லிண்ட்சே ஃபலாச் தான், 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர் மருத்துவர்களின் ஆலோசனையுடன் தகுதிச்சுற்றில் கலந்துக்கொண்டுள்ளார். தனக்கும், தனது குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு அவர் எச்சரிக்கையுடன் அதில் கலந்துக்கொண்டுள்ளார்.

ஹெப்டத்லான்
ஹெப்டத்லான் என்பது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 200 மீ, 800மீ ஓட்டப்பந்தயம் மற்றும் 100மீ தடைகள் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 விதமான போட்டிகளை கொண்டதாகும். இதில் 18 பேர் கலந்துக்கொண்ட நிலையில் ஃப்லான்ச் 15வது இடத்தை பிடித்துள்ளார். அதுவும் 110 டிகிரி வெயிலில் இதனை செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த நிலைமையில் 7 போட்டிகளையும் முடித்துக்காட்டியதே எனக்கு வெற்றி தான் எனத் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

எச்சரிகை செயல்பாடுகள்
இந்த 7 போட்டிகளின் போதும் லிண்ட்சே ஃபலாச், தனது குழந்தைகாக மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டது பாராட்டுக்களை பெற்றுள்ளது. குண்டு எறியும் போட்டியில் மூன்று முறை முயற்சி செய்யலாம். ஆனால் ஃப்லாச் ஒரே ஒரு முறை மட்டுமே முயற்சித்தார். இதே போல 800மீ ஓட்டப்பந்தயத்தில் 100மீ தூரத்திலேயே ஃப்லான்ச் களத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

ஏன் இவ்வளவு ஆர்வம்
இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இதில் கலந்துக்கொண்டீர்கள் எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த தகுதிச்சுற்றில் என்னால் வெற்றி பெற முடியாது என்பது எனக்கு தெரியும், எனினும் ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டவே இதில் கலந்துக்கொண்டே எனக்கூறியது ரசிகர்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications