For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பையில் நியூசிலாந்தை, இங்கிலாந்து ஜெயிச்சி 32 வருஷம் ஆகி போச்சி.. தொடரும் வரலாற்று சோகம்!

By Veera Kumar

வெலிங்டன்: 32 ஆண்டுகளில் ஒருமுறை கூட உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை. இன்றைய தோல்வியின் மூலம், அந்த வரலாற்று சோகம் இங்கிலாந்து ரசிகர்கள் மனதில் இன்னும் தொடருகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலில் ஒரு பக்கமே கை ஓங்கியிருப்பது 23 ஆண்டுகளாகத்தான் தொடருகிறது. ஆனால் இந்த இரு நாடுகளின் பஞ்சாயத்து அதுக்கும் மேல..

இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

1983ம் ஆண்டு உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வென்றது. அதன்பிறகு அதே தொடரில் மீண்டும் ஒருமுறை இரு அணிகளும் மோதின. அப்போது நியூசிலாந்து வென்றது. அதன்பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை எந்த ஒரு உலக கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து வென்றது கிடையாது.

அனைத்திலும் நியூசிலாந்தே

அனைத்திலும் நியூசிலாந்தே

ஏனெனில் 1983 உலக கோப்பைக்கு பிறகு, 1992, 1996 மற்றும் 2007 ஆகிய உலக கோப்பைகளில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் வாய்ப்பை பெற்றன. இருப்பினும், அனைத்து போட்டிகளிலுமே நியூசிலாந்துதான் வென்றுள்ளது.

32 ஆண்டுகளிலேயே இன்றுதான் மிக மோசம்

32 ஆண்டுகளிலேயே இன்றுதான் மிக மோசம்

எனவே 32 ஆண்டுகளாக நியூசிலாந்தை இங்கிலாந்து வென்றதில்லை என்ற அவப்பெயரை நீக்க இன்று நடைபெற்ற போட்டி உதவும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரலாறு காணாதவிதமாக இன்றைய போட்டியில்தான், இங்கிலாந்து இன்னும் மோசமாக தோற்றுள்ளது.

சவுத்தி 7 விக்கெட் சாதனை

சவுத்தி 7 விக்கெட் சாதனை

நியூசிலாந்தின் டிம்சவுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த பெருமையை இந்த போட்டியில் பெற்றார்.

மெக்கல்லமும் சாதனை

மெக்கல்லமும் சாதனை

பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் அடித்து உலக கோப்பை போட்டிகளிலேயே குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் இன்றைய போட்டியில் நிகழ்த்தினார். ஆக மொத்தத்தில், பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே, இங்கிலாந்து பரிதாபமாக விழித்தது.

இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாயத்து

இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாயத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 1992 உலக கோப்பை முதல்தான் மோதும் வாய்ப்பை பெற்றன. நடப்பு உலக கோப்பையுடன் சேர்த்து ஆறு முறை இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. ஆறிலும் இந்தியாவே வென்றுள்ளது. வருடக் கணக்கு என்று பார்த்தால் 23 வருடங்களாகும். ஆனால் இங்கிலாந்து-நியூசிலாந்து விவகாரம் 32 ஆண்டுகள் நீடிக்கிறது.

Story first published: Friday, February 20, 2015, 11:32 [IST]
Other articles published on Feb 20, 2015
English summary
1983 The last time England beat New Zealand in the World Cup, which was in the opening match of the 1983 edition.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+