2022 செஸ் ஒலிம்பியாட்.. முதல் நாளில் தமிழக வீராங்கனை அசத்தல்.. இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி
சென்னை: 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் நாளில் களமிறங்கிய 6 இந்திய அணிகளும் 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றன.

முதல் நாளின் முதல் சுற்றில் 184 நாடுகளை சேர்ந்த அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடியது.
இதில் இந்திய அணி இரு பிரிவுகளிலும் தலா 3 அணிகளை களமிறக்கியது. இதில் இந்திய பி அணியில் இடம்பெற்ற சத்வாணி , யுஏஇ வீரர் அப்துல் ரஹ்மானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றார்.
இதே போன்று பி அணியில் இடம்பெற்ற நிஹல் சரின், குகேஷ், ஆதிபன் ஆகியோர், தங்களது போட்டியில் வெற்றி பெற்று 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற விதித் குஜராத்தி, அர்ஜூன், நாராயணன், சசிகரன் ஆகியோர் ஜிம்பாப்வே அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதே போன்று இந்திய சி அணியில் சேதுராமன், அப்ஜித், முரளி கார்த்திகேயன், அபிமன்யூ ஆகியோர் தெற்கு சூடான் அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். அதே போன்று மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை வைசாலி உள்ளிட்டோர் தஜகாஜஸ்தான் அணியை வீழ்த்தினர்.
இதே போன்று மகளிர் பிரிவில் இந்திய பி அணி வேல்ஸ் அணியையும், இந்திய சி அணி ஹாங்காங் அணியையும் வீழ்த்தியது. இந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்ட பிரக்ஞானந்தா இன்றைய சுற்றில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 chess Olympiad day 1 reults - TN Girl started with win2022 செஸ் ஒலிம்பியாட்.. முதல் நாளில் தமிழக வீராங்கனை அசத்தல்.. இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி
44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் நாளில் களமிறங்கிய 6 இந்திய அணிகளும் 4க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. முதல் நாளின் முதல் சுற்றில் 184 நாடுகளை சேர்ந்த அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடியது. இதில் இந்திய அணி இரு பிரிவுகளிலும் தலா 3 அணிகளை களமிறக்கியது. இதில் இந்திய பி அணியில் இடம்பெற்ற சத்வாணி , யுஏஇ வீரர் அப்துல் ரஹ்மானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றார்.


Click it and Unblock the Notifications