For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா Vs இந்தியா.. ரூசிகரமான போட்டி.. வெற்றி பாதைக்கு திரும்பிய பிரக்ஞானந்தா

சென்னை: 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

இன்று நடைபெற்ற 7வது சுற்றில் ஒரு வினோதம் நடந்துள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தலா 3 அணிகளை அனுப்பியுள்ளது.

இதனால், தொடரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவும், இந்தியாவுமே மோதிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டது.

இந்தியா Vs இந்தியா

இந்தியா Vs இந்தியா

அந்த வகையில் இன்று 7வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா ஏ அணி, இந்தியாவின் சி அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஏ அணியில் உள்ள ஹரிகிருஷ்ணாவும், சி அணியில் உள்ள கங்குலியும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதே போன்று இந்திய ஏ அணியில் இருந்த குஜராத்தியும், தமிழக வீரர் சேதுராமனும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

இந்தியா ஏ வெற்றி

இந்தியா ஏ வெற்றி

இதனையடுத்து இந்திய ஏ அணியின் அர்ஜூன், இந்திய சி அணியின் குப்தாவை வீழ்த்த, கடைசி போட்டியில் இந்திய ஏ அணியின் நாராயணன், இந்திய சி அணியின் அபிமன்யூவை வீழ்த்த, இந்திய ஏ அணி 3க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பிரக்ஞானந்தா வெற்றி

பிரக்ஞானந்தா வெற்றி

இதே போன்று இந்திய 2 அணி 7வது சுற்றில் கியூபாவை வென்றது. இதில் தமிழக வீரர் குகேஷ், டேனியலை வீழ்த்தி, தொடர்ந்து 7வது வெற்றியை பெற்றார். இதே போன்று ஷரின் நிஹல், ஏர்னஸ்டோவை வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரக்ஞானந்தா 5வது சுற்றில் தோல்வியை தழுவியதால், 6வது சுற்றில் விளையாட வில்லை.

மகளிர் அணி அபாரம்

மகளிர் அணி அபாரம்

இந்த நிலையில், 7வது சுற்றில் கியூபா வீரர் ரெனால்டோவை கறுப்பு காய்களுடன் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இதில் 42வது நகர்த்தலில் ரெனால்டோவை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். கடைசி போட்டியில் ஆதிபன் சமன் செய்ய, இந்திய பி அணி மூன்றரை புள்ளிகள் பெற்று வென்றது. மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும், சி அணியும் வெற்றி பெற பி அணி தோல்வியை தழுவியது. சி அணியில் உள்ள தமிழக வீராங்கனை நந்திதா 6 போட்டியில் களமிறங்கி 5 போட்டியில் வென்று, ஒரு போட்டியில் டிரா செய்துள்ளார்.

Story first published: Wednesday, August 10, 2022, 10:32 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
2022 Chess Olympiad day 7 – Praggnanandhaa won and India A faced India c செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா Vs இந்தியா.. ரூசிகரமான போட்டி.. வெற்றி பாதைக்கு திரும்பிய பிரக்ஞானந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+