Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த்தில் இந்தியா அபாரம்.. குத்துச்சண்டையில் 6 பதக்கம் உறுதி.. வெற்றியுடன் தொடங்கிய பிவி சிந்து

பிர்மிங்காம் : 2022 காமன்வெல்த் தொடரில் இந்திய அணி இதுவரை இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறது.

பளுதூக்கும் பிரிவில் மட்டும் இந்திய அணி 3 தங்கம் உள்ளிட்ட 10 பதக்கங்களை வென்று இருக்கிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இந்த பிரிவில் 9 பதக்கத்தை மட்டுமே வென்றது.

ஆனால் தங்கப் பதக்கத்தை தற்போது காட்டிலும் கூடுலாக 2 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

2022 Commonwealth day 7 results – India assured of 6 medals in boxing

இதே போன்று குத்துச்சண்டையில் மட்டும் இந்திய அணி மேலும் 6 பதக்கம் உறுதியாகி உள்ளது.ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் அமித் பாங்கல் பதக்கத்தை உறுதி செய்தார்.இதே போன்று, மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஜாஸ்மின் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்

ஆடவருக்கான 92 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சாஹர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி 6வது பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார். மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஹிமா தாஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் அஸ்வினி பொன்னப்பா,சுமித் ரெட்டி 2வது சுற்றில் தோல்வியை தழுவினர்.

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி. மாலத்தீவு வீராங்கனை பாத்திமாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா, சவுரவ் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, ஹரிந்தர் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியை தழுவினர்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:02 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+