2022 காமன்வெல்த் விளையாட்டு.. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. நீச்சலில் சாதித்த இந்திய வீரர்
பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய ஒரே நாளில் 4 பதக்கத்தை தட்டி சென்றுள்ளது.
பிர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாவிலிருந்து 211 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் துப்பாக்கிச் சடும் போட்டி இம்முறை காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், முதல் நாளில் எவ்வித பதக்கத்தையும் இந்தியா கைப்பற்றாத நிலையில், 2வது நாளில் ஒரே நாளில் 4 பதக்கத்தை அதுவும் பளுதூக்கும் பிரிவில் இந்தியா வென்றுள்ளது.

3 பதக்கம்
மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு, காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து 2வது தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இதே போன்று ஆடவர் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சாங்கேட் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே போன்று 61 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெண்கலம் வென்றார்.

பிந்தயா ராணி
இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி அதிகாலையில் நடைபெற்ற மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில்இந்திய வீராங்கனை பிந்தயா ராணி ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோ எடையையும், கிளின் அண்ட் ஜர்க் பிரிவில் 116 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது இந்தியா வெல்லும் 4வது பதக்கமாகும்.

நீச்சல் போட்டி
இதே போன்று நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 100 மீ பிரிவின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க வீரர் பீட்டர் கொயிட்ஸ் தங்கம் வென்றார். காமமன்வெல்த் நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ஸ்ரீஹரி நட்ராஜ் பந்தய தூரத்தை 54.31 விநாடிகளில் கடந்து 7வது இடத்தை பிடித்தார்.

பதக்கப் பட்டியல்
மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை 3க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஸ்குவாண் மகளிருக்கான குழு போட்டியின் காலிறுதியில் மலேசியாவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியை பெற்றது. இந்த நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. தற்போது பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications