
ஹாட்ரிக் தங்கம்
இதனைத் தொடர்ந்து பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இங்கிலாந்தின் பென் லேன், வெண்டி ஜோடியை எதிர்கொண்டது. இதில், 21க்கு15, 21க்கு13 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சாத்விக், சிராக் ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த ஜோடி கடந்த தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், தற்போது தங்கம் கிடைத்துள்ளது.

தமிழக வீரருக்கு தங்கம்
இதனையடுத்து டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 40 வயதான சரத்கமல், த 4க்கு1 என்ற செட் கணக்கில் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இது காமன்வெல்த் வரலாற்றில் சரத்கமல் வெல்லும் 7வது தங்கமாகும்.

வெண்கலம்
இதே போன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மற்றொரு தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், பிரிட்டன் வீரர் பால் டிரிங்ஹாலை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த தொடரில் 4க்கு3 என்ற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றார். ஆடவர் ஹாக்கி போட்டியின் இறுதி சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதியது.

ஹாக்கியில் வெள்ளி
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கோல் மழையை ஆஸ்திரேலியா பொழிய 7க்கு0 என்ற கணக்கில் அந்த அணி வென்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்பு தொடரில் மொத்தமாக இந்தியா 61 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தொடரில் இந்தியா 66 பதக்கங்களை வென்று இருந்தது. இம்முறை துப்பாக்கி சுடும் போட்டி, வில்வித்தை ஆகிய போட்டிகள் இல்லாத நிலையில், இந்தியா இவ்வளவு பதக்கங்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











