Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மணி நேரத்தில் 5 பதக்கம்... இந்திய வீரர்களின் அசத்தல் சாதனை.. காமன்வெல்த்தில் பதக்க வேட்டை

பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்திய அணி 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றது.இதன் மூலம் 25 பதக்கங்களை வென்ற இந்திய அணி பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குறிப்பாக மல்யுத்தம் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒரு மணி நேரத்தில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றது.

வெள்ளி பதக்கம்

வெள்ளி பதக்கம்

மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 2 முறை காமன்வெல்த் சாம்பியனான நைஜிரிய வீராங்கனை ஓடோனியாவிடம் 4க்கு7 என்ற கணக்கில் வீழ்ந்த அன்சு மாலிக்கிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

முன்பாக விளையாடிய தனது 2 போட்டியையும் அன்சு மாலிக் ஒரு நிமிடத்திற்குள் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் பதக்கம்

ஹாட்ரிக் பதக்கம்

இதே போன்று ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீரர் மெக்லேயினை எதிர்கொண்ட அவர் 9க்கு2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் பூனியா ஹாட்ரிக் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஷாக்சி மாலிக் தங்கம்

ஷாக்சி மாலிக் தங்கம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் பூனியா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றார். மகளிருக்கான மல்யுத்தம் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷாக்சி மாலிக் தங்கம் வென்றார். கனடா வீராங்கனை ஆனா கோட்னிசை வீழ்த்திய அவர் ஏற்கனவே 2014 காமன்வெல்த்தில் வெள்ளியும். 2018 காமன்வெல்த்தில் வெண்கலமும் வென்று இருக்கிறார். 2016 ஒலிம்பிக் போட்டியில் வென்கலம் வென்வர் ஆவார்.ஆடவருக்கான மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா தங்கம் வென்றுள்ளது. மல்யுத்தம் மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்றார்

தமிழக ஜோடி அசத்தல்

தமிழக ஜோடி அசத்தல்

இதே போன்று டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு தமிழக ஜோடி சரத் கமல், சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல், ஸ்ரீஜா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு பிவி சிந்து தகுதி. உகாண்டா வீராங்கனை ஹூசினா 21க்கு10,21க்கு9 என்ற கணக்கில் வீழ்த்தினார்

Story first published: Tuesday, August 9, 2022, 19:02 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+