Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் விளையாட்டு 2022 கோலாகலமாக தொடக்கம்.. பிவி சிந்துக்கு கிடைத்த கவுரவம்..சாதிக்குமா இந்தியா

பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோகலமாக பிர்மிங்காமில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து 3வது முறையாக காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது.

அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 72 நாடுகளை சேர்ந்த மொத்தம் 5054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ,

காமன்வெல்த் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் பிரிவுகளை விட மகளிர் பிரிவில் அதிக போட்டிகள் நடைபெறுகிறது.

மகளிர் கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்

1998 காமன்வெல்த் போட்டிக்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் போட்டி, இந்த தொடரில் மீண்டும் திரும்புகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் பங்கேற்கிறது. இந்த தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த கூடிய துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நீக்கப்பட்டது. '

பதக்க வாய்ப்பு யாருக்கு

பதக்க வாய்ப்பு யாருக்கு

இதே போன்று வில்வித்தை போட்டிகளும் இடம்பெறவில்லை. இந்த தொடரில் பேட்மிண்டனில் பிவி சிந்து, பளுதூக்கும் போட்டியில் மீரா பாய் சானு, ஹாக்கியில் இந்திய ஆடவர், மகளிர் அணி, டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிக்கா பத்ரா, மல்யுத்தம் போட்டியில் பஜ்ரங் பூனியா , மகளிர் ஒட்டப்பந்தயத்தில் துட்டி சந்த் மற்றும் ஹிமா தாஸ் , குத்துச்சண்டையில் சிவா தபா உள்ளிட்டோர் தங்கப் பதக்கம் வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி எத்தனை பேர்?

இந்திய அணி எத்தனை பேர்?

இதே போன்று நீரஜ் சோப்ரா, மேரி கோம் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்தியா மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் 106 ஆடவர்கள், 105 மகளிர் என 211 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பிவி சிந்துக்கு கவுரவம்

பிவி சிந்துக்கு கவுரவம்

இந்த நிலையில் தொடக்க விழாவில் பிர்மிங்காம் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் கண் கவரும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, கொடிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவை, நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடியை ஏந்தி வழிநடத்தினார். இந்தியாவுக்கு மைதானம் அதிரும் அளவுக்கு பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:06 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+