Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு..தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு தடை..என்ன நடந்தது

திருச்சி: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பிர்மிங்காமில் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

காமன்வெல்த் வரலாற்றிலேயே தற்போது தான் 3வது முறையாக இங்கிலாந்தில் இந்த தொடர் நடைபெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியா அதிகம் பதக்கம் வாங்கும் விளையாட்டாக கருதப்படும் துப்பாக்கி சுடுதல் போட்டி இம்முறை காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

36 பேர்

36 பேர்

இந்த நிலையில், காமன்வெல்த் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை அறிவித்தது. இதில் 200 மீட்டர் தடகளம் மற்றும், ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

இதில் தனலட்சுமி சேகர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

சாதனை நாயகி

சாதனை நாயகி

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். அந்த தொடரில் ஹிமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார்.

ஐஸ்வர்யா தகுதி நீக்கம்

ஐஸ்வர்யா தகுதி நீக்கம்

மீண்டும் இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் இந்தியகிராண்ட் ஃப்ரி தடகள பந்தயத்தில் ஹிமா தாசை தோற்கடித்து தனலட்சுமி தங்கம் வென்றார். பல்வேறு சாதனைகளை செய்தும், டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி இடம்பெற்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனிடையே, 2022 காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யாவும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நீக்கப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:06 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+