Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 காமன்வெல்த் இந்தியாவுக்கு 2வது தங்கம்..காயத்தால் தவழ்ந்து, கீழே விழுந்த வீரர்..தடையை மீறி சாதனை

பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2வது தங்கம் வென்று அசத்தியுள்ளது.

பளுதூக்கும் போட்டியில் ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவில் 19 வயதான இந்திய வீரர் ஜெர்மி தங்கப் பதக்கம் வென்றார்.

அதுவும் சும்மா ஜெயிக்கவில்லை, தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மீறி மேடைக்கு தவழ்ந்து கொண்டே சென்று வென்று இருக்கிறார்.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

19 வயதான ஜெர்மி, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். டோக்யோ ஒலிம்பிக்கில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் பங்கு பெறவில்லை. இருப்பினும் நாட்டுக்காக பதக்கம் வென்றே தீர வேண்டும் என்று ஜெர்மி கடுமையாக உழைத்தார்.

வால்பேப்பரில் தங்கம்

வால்பேப்பரில் தங்கம்

காமன்வெல்த் போட்டியில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை தனது செல்போன் வால் பேப்பரில் வைத்து கொண்டு பயிற்சியில் இறங்கிய அவருக்கு இன்று கடும் போராட்டமாக மாறியது போட்டி. ஸ்நாட்ச் பிரிவில் 140 கிலோ எடையை தூக்கிய ஜெர்மிக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல், கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் ( முதல் எடையை தூக்கி, ஒரு காலை பின்னால் வைத்து, மீண்டும் தலைக்கு மேல் சரியாக தூக்கி, இரண்டு காலையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டும்) தான் அவருக்கு சோதனை காத்திருந்தது.

காயத்தால் அவதி

காயத்தால் அவதி

154 கிலோ எடையை தூக்கும் போது ஜெர்மிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் தூக்க முடியாமல் அப்படியே கீழே விழுந்து சரிந்தார். வலியால் துடித்த அவர் போட்டியிலிருந்து விலகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் மேடைக்கு வந்த அவர் இம்முறை 160 கிலோ எடையை வெற்றிக்கரமாக துக்கினார்.

இந்தியாவுக்கு 2வது தங்கம்

இந்தியாவுக்கு 2வது தங்கம்

இதன் பின்னர், தனது 3வது முயற்சியில் ஜெர்மி 165 கிலோ எடையை தூக்க முயன்றார். அப்போது, காயத்தின் வலியால் கீழே விழுந்து வலியால் துடித்து தவழ்ந்து கொண்டே சென்றார். ஆனால் ஜெர்மி 160 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கியதே அவருக்கு தங்கத்தை பெற்று தந்தது. இருப்பிரிவிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 300 கிலோ எடையை தூக்கிய அவர் தங்கப் பதக்கம் வென்ற போது , தனது வலியை மறந்து நாட்டுக்காக சாதித்ததை நினைத்து சிரித்தார். இது காமன்வெல்த் பளுதூக்கும் பிரிவில் இந்தியா வெல்லும் 2வது தங்கமாகும்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:05 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+