
குளிர்க்கால ஒலிம்பிக்
வரும் 14ஆம் தேதி ஐ.சி.சி. U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதே போன்று இம்மாதம் மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.. வரும் பிப்ரவரி மாதம் குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் நடைபெறுகிறது.

ஐ.பி.எல் தொடர்
ஏப்ரல், மே மாதம் வழக்கம் போல் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஜூலை மாதம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.இந்த தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வாங்கி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய போட்டிகள்
வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை போட்டி நீக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. . இதில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.இதே போன்று ஜூலை மாதம் மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது இதே போன்று சீனாவில் செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து,உலகின் மிகப் பெரிய தொடரான 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் டிசம்பர் மாதம் கத்தாரில் நடைபெறுகிறது. இது கால்பந்து ரசிகர்களுக்கு கனவு ஆண்டாக இருக்கம். இதை தவிர 4 கிராண்ட் ஸ்லாம் தொடர், ஃபார்முலா ஓன், பேட்மிண்டன் தொடர், இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் என 2022ஆம் ஆண்டு கலக்கட்டும்.


Click it and Unblock the Notifications