For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

WWE ROYAL RUMBLE பட்டத்தை வென்றார் பிராக் லேஸ்னர்..!! பட்டாசான ஆட்டத்தில் EDGE ஜோடி அபாரம்..

செ.லூயிஸ்: 35 வது WWE ROYAL RUMBLE மல்யுத்த போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது.உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உடைய WWE மல்யுத்த போட்டிகள்,

நாடகம் போல் திரைக்கதை எழுதி அமைக்கப்படும் பொழுது போக்கு விளையாட்டு தொடர்.இதனால் பரபரப்புக்கும்,ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது.

IPL-ல் அயல்நாட்டுக்கு மவுசு.. 5 தொடக்க வீரர்களுக்காக கொட்டும் பண மழை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!IPL-ல் அயல்நாட்டுக்கு மவுசு.. 5 தொடக்க வீரர்களுக்காக கொட்டும் பண மழை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!

இந்த WWE தொடரில் மிகவும் முக்கியமானது ராயல் ரம்பிள் தொடராகும். இதில் 30 வீரர்கள் சில நிமிட இடைவெளியில் களத்துக்கு வருவார்கள். இதில் அனைத்து விரர்களும் வெளியேற்றபட்டு கடைசியில் யார் களத்தில் நிற்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார்கள்

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

2022ஆம் ஆண்டு ராயல் ரம்பளில் மொத்தம் 30 வீரர்கள் சில நிமிட இடைவெளியில் ஒருவருக்கு ஒருவராக பங்கேற்றனர்.இதில் ஏ.ஜே. ஸ்டைல்ஸ், டாப் சிக்லர், சேமஸ், ரேமிஸ்டரியோ, கோஃபி கிங்ஸ்டன்,ராண்டி ஆர்டன் , பிராக் லேஸ்னர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

பிராக்லெஸ்னர் வெற்றி

பிராக்லெஸ்னர் வெற்றி

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒவ்வொரு

வீரரும், மற்ற வீரர்களை களத்தை விட்டு வெளியேற்ற கடுமையாக போராடினர். இதில் அதிகபட்சமாக ஏ.ஜே. ஸ்டைல்ஸ், 6 வீரர்களை வெளியேற்றினார். பிராக் லெஸ்னர் 5 வீரர்களை வெளியேற்றினார். இறுதியாக நட்சத்திர வீரர் ராண்டி ஆர்டினை வெளியேற்றிய பிராக் லெஸ்னர், ராயல் ரம்பிள் பட்டத்தை 2வது முறையாக வென்றார். இதன் மூலம், WRESTLEMANIA தொடரில் WWE சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு அவர் போட்டி போட தகுதி பெற்றார்.

சேத் ராலன்ஸ் Vs ரோமன் ரெய்ன்ஸ்

சேத் ராலன்ஸ் Vs ரோமன் ரெய்ன்ஸ்

இதே போன்று தனி நபர்களுக்கான ஆட்டங்களும் நடைபெற்றது. இதில் WWE Universal champion பட்டத்திற்கான போட்டியில் செத் ராலன்ஸ் மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் மோதினர். இதில் Disqualification முறையில் ராலின்ஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சாம்பியன் படடம் ரோமன் ரெய்ன்சிடமே உள்ளது.

WWE சாம்பியன்ஷிப்

WWE சாம்பியன்ஷிப்

இதே போன்று WWE சாம்பியன்ஷிப் பட்டத்தில் பாபி லெஷ்லி மற்றும் பிராக் லெஸ்னரும் மோதினர். இருவரும் தங்களது டிரேட் மார்க் சண்டை நுட்பத்தை வெளிப்படுத்தினர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் PINFALL முறையில் பாபி லெஷ்லி வெற்றி பெற்றார். கலப்பு டேக் டீம் போட்டியில் எட்ஜ் ஜோடி மிஷ் ஜோடியை வீழ்த்தியது. இதே போன்று மகளிருக்கான ராயல் ரம்பிள் போட்டியில் ரோண்டா ரவ்ஸி வெற்றி பெற்றார்.

Story first published: Sunday, January 30, 2022, 16:01 [IST]
Other articles published on Jan 30, 2022
English summary
2022 WWE Royal Rumble Matches Highlights, Winners List in Tamil WWE ROYAL RUMBLE பட்டத்தை வென்றார் பிராக் லேஸ்னர்..!! பட்டாசான ஆட்டத்தில் EDGE ஜோடி அபாரம்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X