22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் தொடக்கம்- 45 நாடுகளில் 800 வீரர்கள் பங்கேற்பு!
புவனேஸ்வர்: 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கின. 45 நாடுகளில் 800 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய தடகள போட்டிகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிதிநிலை பிரச்சனையால் ஒடிஷாவின் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டது.

ஒடிஷாவின் தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் இந்த போட்டிகள் இன்று காலை தொடங்கின. இதையொட்டி நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன,

இப்போட்டிகளில் 45 நாடுகளின் 800 வீரர்கள் 42 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 49 இந்திய வீரர்கள், 46 இந்திய வீராங்கனைகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக கடந்த 1989-ல் டெல்லியிலும் 2013-ல் ஆண்டு பூனேவிலும் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications