உத்தரக்காண்ட் : 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வீராங்கனைகள் வித்யா ராமராஜ் மற்றும் நித்யா ராம்ராஜ் ஆகியோர் 3 பதக்கங்களை மொத்தமாக கைப்பற்றி அசத்தி இருக்கிறார்கள்.
இதில் வித்யா ராமராஜ் 39 ஆண்டுகளாக 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பிடி உஷாவின் சாதனையை கடந்த ஆண்டு சமன் செய்தார். இதனால் வித்யா ராமராஜ் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி இருந்தது.

இந்த சூழலில் 38 வது தேசிய விளையாட்டு போட்டியில் நித்யா ராமராஜ் ஒரு தங்கம்,ஒரு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 58.11 வினாடிகளில் கடந்த வித்யா ராமராஜ் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோன்று 400 லிட்டர் ஓட்டத்தில் வித்யா ராமராஜ் வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றி இருந்தார்.
இதேபோன்று இவருடைய இரட்டையரான நித்யா ராம்ராஜ் 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோன்று ரீலே போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற அணியில் நித்யா ராமராஜ் இருந்தாலும், கடைசி நேரத்தில் தமிழக அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
கோயமுத்தூர் சேர்ந்த இந்த இரட்டையர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள். இதில் நித்யா ராம்ராஜ் பாலக்காட்டு ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறார். வித்யா ராம்ராஜ் கோவையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார். தங்களுடைய சாதனை குறித்து பேட்டி அளித்துள்ள நித்யா, வித்யா தாங்கள் இருவரும் ஏழாம் வகுப்பிலிருந்து விளையாட்டு துறையில் சாதித்து வருவதாகவும், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பயிற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
தனது தந்தைக்கு மூன்றுமே பெண் குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ள நித்யா,வித்யா, தாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வர தந்தை உறுதுணையாக இருந்ததாக கூறியுள்ளார். பிடி உஷா சாதனையை வித்யா சமன் செய்தது அடுத்து ஊடக வெளிச்சம் தங்கள் மீது பட்டதாகவும்,அப்போது பலரும் வித்யா என நினைத்து நித்யாவிடம் போட்டோ எடுத்துக் கொண்டதாகவும் இருவரும் பேசி சிரித்தனர்.
இந்த தொடரில் மூன்று பதக்கங்கள் வென்றாலும்,அது தங்களுக்கு திருப்திகரமாக இல்லை என குறிப்பிட்டுள்ள சகோதரிகள், இந்த தொடர் ஆப் சீசனில் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.இந்த தொடருக்கு என சிறப்பான முறையில் தயாராக முடியவில்லை என்றும், இந்த தொடருக்கு முன்பே நாங்கள் பல போட்டிகளில் விளையாடிவிட்டதால் உடல் அளவிலும் சோர்வாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஜே எஸ் டபிள்யூ நிறுவனம் தங்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவதாகவும் மத்திய மாநில அரசும் தங்களை ஊக்கப்படுத்தி வருவதாகவும் இரட்டையர் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.