Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த செஸ் ஒலிம்பியாட் எங்கு தெரியுமா??.. தமிழகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட உரிமை.. சூப்பர் தகவல்!

சென்னை: இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்ததாக எந்த நாட்டில் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் இந்திய அணியும் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

பதக்க விவரங்கள்

பதக்க விவரங்கள்

11 சுற்றுகளின் முடிவில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கமும், இதே போல 2வது இடத்தை அர்மேனியா நாட்டின் அணியும் பிடித்துள்ளது. பிரக்ஞானந்தா இடம்பெற்றிருந்த இந்திய பி அணி 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதே போல மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியது. இந்தியாவின் ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

நிறைவு நிகழ்ச்சி

நிறைவு நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு செய்யப்பட்ட ஏற்பாட்டை போன்றே நிறைவு விழாவுக்கும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் விளையாட்டுகள் மற்றும் கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் விதமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதே போல பறக்கும் டிரம்ஸ், பறக்கும் பியானோ என இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அடுத்த செஸ் ஒலிம்பியாட் எங்கு

அடுத்த செஸ் ஒலிம்பியாட் எங்கு

இந்நிலையில் இப்படி சிறப்பாக முடிந்த இந்த செஸ் ஒலிம்பியாட் அடுத்தது எப்போது? எங்கு நடைபெற போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான போட்டியை ஹங்கேரி நாடு நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உரிமை ஒப்படைப்பு

உரிமை ஒப்படைப்பு

நிறைவு நிகழ்ச்சியின் போதே வழக்கமாக அடுத்த செஸ் ஒலிம்பியாட்டின் அறிவிப்பு வெளியாகும். அதன்படி ஹங்கேரி நாடு அந்த உரிமையை பெற்றது. மேலும் செஸ் மரபுப்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடியை ஹங்கேரி நாட்டின் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Story first published: Wednesday, August 10, 2022, 22:34 [IST]
Other articles published on Aug 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+