கடந்த ஆண்டில் 56 கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புக்கிகள் அணுகினர்- ஸ்டீவ் வாக் தகவல்

இதுகுறித்து அவர் கூறுகையில், உலக அளவில் கிரிக்கெட் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த ஆண்டுமட்டும் 56 வீரர்களை புக்கிகள் அணுகியுள்ளனர்.
புக்கிகளால் அணுகப்படும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து பெருகிக் கொண்டே போவதால் இதை இனியும் ஐசிசி அலட்சியப்படுத்தக் கூடாது. சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா, இல்லையா என்பதை வீரர்களிடமிருந்து தெரிந்து கொள்ள லை டிடெக்ட் கருவிகளை விசாரணைக்குப் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த எனது திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நிராகரித்துள்ளது வருத்தம் தருகிறது.
ஆனால் புக்கிகள் தங்களை அணுகியதாக கிட்டத்தட்ட 56 பேர் என்னிடம் சொன்னபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து ஐசிசி தீவிரமான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் வாக்.
வீரர்களிடம் விசாரணை நடத்தும்போது பொய் சொல்கிறார்களா என்பதை கண்டறியும் லை டிடெக்டர் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் வாக் கூறியிருந்தார். ஆனால் இதை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை செயலதிகாரி டிம் மே நிராகரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:48 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications