For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 மணி நேரமாக ஏர்போர்ட்டில்.. படாதபாடு பட்ட இந்திய அணி.. அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, ஒரு அணி டோக்கியோ விமான நிலையத்தை விட்டு வெளியே வருவதற்குள் பெரும்பாடு பட வேண்டியதாக உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 பரவும் வைரஸ்

பரவும் வைரஸ்

உலகை அச்சுறுத்தி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜப்பானில் போட்டிகளை நடத்தக்கூடாது என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் மிகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் போட்டிகளை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. மேலும் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கியிருந்தது.

 7 நாட்களுக்கு முன்னதாக

7 நாட்களுக்கு முன்னதாக

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆகஸ்ட் 22 வரை

ஆகஸ்ட் 22 வரை

இந்த சூழலில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜூலை 12ம் தேதி முதல் இது ஆகஸ்ட் 22 வரை அவசர நிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 காத்திருந்த கொடுமை

காத்திருந்த கொடுமை

இந்நிலையில், இந்திய sailors அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்ற போது, அங்கு விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 6 பேர் கொண்ட இந்திய sailors அணி டோக்கியோ சென்றடைந்தது. இதில், நான்கு வீரர்களும், இரண்டு பயிற்சியாளர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இறங்கிய பின்பு, கோவிட் சோதனை மற்றும் சில தொலழில்நுட்ப சோதனை போன்றவற்றால் எட்டு மணி நேரம் அங்கேயே காத்திருந்த பிறகு அவர்கள் தாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்றிருக்கின்றனர்.

 புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ்

புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ்

எட்டு மணி நேரத்துக்கு அப்படி என்ன தான் நடந்தது? டி-போர்டிங் முடிந்த உடனேயே, இந்திய அணியின் தொலைபேசிகளை இரண்டு apps-களுக்காக quarantine அதிகாரி ஒருவர் சோதித்தார் - ஒன்று சுகாதார கண்காணிப்பு மற்றும் மற்றொன்று தொடர்பு தடமறிதல். அதிகாரிகள் அணியின் ஒவ்வொருவரின் தொலைபேசியிலும் புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் செயல்படுவதை உறுதி செய்தனர். "ஆப்களில் ஒன்றின் மூலம், அவர்கள் ஜப்பான் புறப்படுவதற்கு முந்தைய கோவிட் அறிக்கைகளையும் சரிபார்த்துள்ளனர்.

Recommended Video

Tamilnadu Olympics வீரர்களுக்கு Surprise தந்த Kamal | Oneindia Tamil
 மெடல் வந்தால் ஹேப்பி

மெடல் வந்தால் ஹேப்பி

குவாரன்டைன் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட பின்னர், saliva antigen Covid-19 சோதனைக்கு அணியை உட்படுத் தினர். சோதனை முடிவுக்காக காத்திருக்கும்போது, அவர்கள் அங்கீகார அட்டைகளை சரிபார்த்தல் மற்றும் புறப்படுவதற்கு முந்தைய கோவிட் சோதனையின் சான்றுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பிற முறைகளை நிறைவு செய்தனர். எட்டு மணி நேரமாக இந்த பணிகளை தான் மேற்கொண்டிருந்திருக்கின்றனர். எது எப்படியோ,, இவ்வளவு கொடுமைக்கு பிறகு, அணி ஏதாவது ஒரு மெடலை வாங்கி வந்தால் சிறப்பாக இருக்கும்.

Story first published: Thursday, July 15, 2021, 14:30 [IST]
Other articles published on Jul 15, 2021
English summary
8 hours at airport as Indian sailors in Tokyo - ஒலிம்பிக்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+