விளையாட்டு வீராங்கனைகளை கவர்ச்சியிலிருந்து காக்க வந்த புதிய பிரா

விளையாட்டு வீராங்கனைகள் அணியும் பொறுத்தமற்ற ஆடைகளால், சில நேரங்களில் ஆபாசமாக தெரிகின்றனர். அதுவும் டென்னிஸ் போன்ற போட்டிகளில், வீராங்கணைகள் கடும் சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. குறிப்பாக அவர்கள் அணியும் உள்ளாடைகள்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்கும் வகையில், புதிய விளையாட்டு பிரா ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
இந்த புதிய வகை பிராவில் உள்ள கோப்பை அமைப்பு, அணிந்திருப்பவரின் மார்பகத்தோடு ஒட்டிக் கொள்கிறது. இதனால், அவர் எந்த திசைக்கு திரும்பினாலும் மார்பகங்கள் குதிக்கும் நிலை ஏற்படுவதில்லை. இதனால் ஆபாசம் அடியோடு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த ஆடையில் உள்ள பிரத்யேக அமைப்பு, அணிந்திருப்பவர் குதிக்கும் போதும், மார்பகத்தின் அசைவை குறைக்கிறது.
விளையாட்டு வீராகணைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய இந்த வகை பிரா கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை பிரா, 5 சைஸ்களில் வரும் அக்டோபர் முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை 35 யூரோக்கள், அதாவது, இந்திய மதிப்பில் ஏறக்குறைய 2650 ரூபாய் மட்டுமே.
Story first published: Wednesday, December 7, 2011, 18:48 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications