சந்தீப் பாட்டீலை தூக்கிப் போடுங்க.. நம்ம வாசகர் சன்னி சொல்வதைக் கேளுங்க...!
சென்னை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணித் தேர்வு குறித்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சலசலக்காத, விவாதிக்காத வாயே இல்லை என்று கூறும் அளவுக்கு அலசி ஆராய்ந்து விட்டனர் ரசிகர்கள்.
ரசிகர்கள் மத்தியில் அணித் தேர்வு குறித்து முழுத் திருப்தி இல்லை என்பது மட்டும் தெரிய வருகிறது. யாருமே இது அருமையான அணித் தேர்வு என்று சொல்வது போல இல்லை. காரணம், பலருக்கும் பலவிதமான அதிருப்திகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் நமது வாசகர் ஒருவர் சில யோசனைகளையும், தனது கருத்தையும் முன்வைத்துள்ளார், நமது கமெண்ட் பகுதியில்.

வாசகர் சன்னியின் கருத்து இதுதான்...
நமது அணியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ் குமார், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வேஸ்ட்.
இவர்களுக்குப் பதில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, முரளி விஜய் ஆகியோரைச் சேர்த்திருக்க வேண்டும்.
ஷேவாக்கும், யுவராஜும் பந்து வீசவும் செய்வார்கள், சிறப்பாக பேட் செய்யவும் செய்வார்கள். அதேபோல உத்தப்பாவை 1 முதல் 7வது இடம் வரை எங்கு இறக்கினாலும் சிறப்பாக ஆடக் கூடியவர். அதேபோல நல்ல பீல்டரும் கூட.
மேலும் விஜய் தற்போது நல்ல பார்மில் உள்ளார். எனவே அவரைச் சேர்த்திருக்க வேண்டும் என்று சன்னி கூறுகிறார்.


Click it and Unblock the Notifications