மாதவன் குடும்பத்தில் ஒலிம்பிக் பதக்கம்?.. மகன் கனவுக்காக ஸ்பெஷல் ஏற்பாடு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
துபாய்: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக நடிகர் மாதவன் திடீரென குடும்பத்துடன் துபாய்-க்கு குடிபெயர்ந்துள்ளார்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் கோலிவுட்டின் சாக்லெட் பாயாக இருந்த அவர், தற்போது தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் கலக்கி வருகிறார்.
நடிப்பில் பெரும் புகழை எட்டியுள்ள மாதவனின் மகன் வேதாந்த், விளையாட்டு துறையில் சாதித்து வருவது தான் ஆச்சரியமான விஷயம்.

வேதாந்தின் சாதனை
நடிகர் மாதவனுக்கு 16 வயதில் வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் வீரரான இவர், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார். இதே போல லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.

துபாயில் மாதவன்
இந்நிலையில் வேதாந்தின் அடுத்தகட்ட இலக்கிற்காக குடும்பத்தினருடன் துபாய்-க்கு குடிபெயர்ந்துள்ளார் மாதவன். 2026ம் ஆண்டு ஒலிம்பிக் போடியில் தகுதி பெற வேதாந்த் தீவிராமாக உழைத்து வருகிறார். ஆனால் அவரின் பயிற்சிகளுக்கு ஏற்ற நீச்சல் குளங்கள் சரிவர அமையவில்லை எனத் தெரிகிறது.

என்ன காரணம்
மும்பையில் உள்ள பெரும் நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டது. எனவே வேதாந்த்-க்கு பயிற்சி கொடுப்பதற்கான நீச்சல் குளங்கள் துபாயில் திறந்துள்ளதால், அவரை அங்கு அனுப்ப முடிவு செய்தனர். எனினும் குறைந்தது 4 ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டியிருக்கும் என்பதால் குடும்பத்தையே அங்கு அழைத்து சென்றுவிட்டார் நடிகர் மாதவன்.

மாதவனின் விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், என் மகன் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து பெருமை சேர்த்து வருகிறார். அவர் 2026ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக நாங்கள் துபாய்-க்கு வந்துவிட்டோம். அவருக்கு தேவையான உதவிகளை நானும், எனது மனைவி சரிதாவும் செய்து வருகிறோம் என மாதவன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications