Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில்லுன்னு ஒரு சிசிஎல்... வீரர்களைக் குஷிப்படுத்திய நடிகைகள்!

பெங்களூர்: ஐபிஎல்லை விட படு கவர்ச்சிகரமாக மாறி வருகிறது சினிமா நடிகர்கள் ஆடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள்.

ஒவ்வொரு அணிக்கும் ரசிகைகளாக மாறி ஸ்டேடியங்களை கலக்கி வருகிறார்கள் அந்தந்த அணிகளின் ஆதரவாளர்களாக திகழும் நடிகைகள்.

மும்பையில் நடந்த முதல் போட்டிக்கும் ஏராளமான நடிகைகள் திரண்டு வந்து மும்பை ஹீரோஸ் அணிக்கும், சென்னை ரைனோஸ் அணிக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

இதேபோல ஒவ்வொரு அணிக்கும் என உள்ள நடிகைகள் பட்டாளம் மைதானத்திற்குத் திரண்டு வந்து தங்களது ஆதரவையும், உற்சாகக் கூக்குரல்களையும் எழுப்பி வருகின்றனர்.

விஷாலுக்காக விசிலடித்த வரலட்சுமி

விஷாலுக்காக விசிலடித்த வரலட்சுமி

முதல் போட்டியான மும்பை ஹீரோஸ் மற்றும் சென்னை ரைனோஸ் இடையிலான போட்டியின்போது வரலட்சுமிதான் அனைவரையும் கவர்ந்தார். காரணம், கேப்டன் விஷால் ஆடியபோதெல்லாம் கழுத்தில் கட்டியிருந்த விசிலை எடுத்து பீப்பீப்பீ என்று ஊதியபடியும், உற்சாகக் குரல் கொடுத்து குதித்தபடியும் களேபரமாக காணப்பட்டார்... ஓ.கே.ஓகே....புரியறது.

மும்பைக்கு சப்போர்ட் செய்த லட்சுமி ராய்

மும்பைக்கு சப்போர்ட் செய்த லட்சுமி ராய்

கிரிக்கெட் வீரர்கள் பலருடனும் நல்ல நட்புடன் இருப்பவர் என்று கூறப்படும் லட்சுமி ராய் மும்பை ஹீரோஸ் அணிக்கு ஆதரவாக காணப்பட்டார். சல்மான் கான் தம்பிக்குப் பக்கத்திலேயே நின்று விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருந்தார்.. என்னப் பேசியிருப்பார்...

ஜி்ல்லுன்னு வந்த ஸ்ருதி

ஜி்ல்லுன்னு வந்த ஸ்ருதி

மும்பையில் நடந்த முதல் போட்டியின்போது ஸ்ருதி ஹாசனையும் காண முடிந்தது.

விஜயலட்சுமி.. திரிஷா

விஜயலட்சுமி.. திரிஷா

சென்னைக்கு ஆதரவாக திரிஷாவும், சென்னை 28 பட நாயகி விஜயலட்சுமியும் மஞ்சாக் கலர் டிரஸ்ஸில் கலர்புல்லாக காணப்பட்டனர்.

சல்மா்ன் நாயகி டெய்சி சிங்

சல்மா்ன் நாயகி டெய்சி சிங்

ஜெய்ஹோ படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ஜோடி போட்டுள்ள டெய்சி சிங், மும்பை அணிக்கு ஆதரவாக கொடி பிடித்தபடியும், குரல் கொடுத்தபடியும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

ரெட் ஹாட் சன்னி

ரெட் ஹாட் சன்னி

தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் இடையிலான போட்டியின்போது கவர்ச்சிகரான நடிகைகளை நிறையப் பார்க்க முடிந்தது. அத்தனை பேரிலும் அதீதமாக கவர்ந்தவர் ரெட் ஹாட் உடையில் வந்திருந்த சன்னி லியோன்தான்.

கூடவே சார்மியும்

கூடவே சார்மியும்

இதேபோல சிவப்பு நிற உடையில் வசீகரித்தவர் சார்மி. இருவரும் சேர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்தபடியும் குரல் கொடுத்தபடியும் குதூகளிக்க வைத்தனர்.

பிங்க் பிரியா மணி

பிங்க் பிரியா மணி

பிங்க் நிற உடையில் வந்திருந்த பிரியா மணியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

பச்சைக் கிளி பாவனாவும்

பச்சைக் கிளி பாவனாவும்

கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணியினரை உற்சாகப்படுத்த மலையாள நாயகி பாவனா வந்திருந்தார். பச்சைக் கலர் டிரஸ்ஸில் பச்சைக் கிளி போல படபடக்க வைத்தார்.

சியர் லீடர்களுக்குப் போட்டியாக

சியர் லீடர்களுக்குப் போட்டியாக

ஐபிஎல்லைப் போலவே இந்தப் போட்டிகளிலும் சியர் லீடர்கள் ஆட்டம் போட்டனர். ஆனால் அவர்களுக்குப் போட்டியாக, நம்ம நடிகைகள்தான் படு சியர்புல்லாக உற்சாகப்படுத்தினர்.

போஜ்பூரி ப்யூட்டியும்.. ஜெனீலியா டிசவுசாவும்

போஜ்பூரி ப்யூட்டியும்.. ஜெனீலியா டிசவுசாவும்

வீர்மராத்தி மற்றும் போஜ்பூரி டபாங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின்போது வீர் மராத்திக்காக குரல் கொடுக்க வந்திருந்தார் நம்ம ஊரில் கொஞ்ச காலம் நடித்துக் கொண்டிருந்த ஜெனீலியா டிசவுசா. ஆனால் அவருக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்பது போல போஜ்பூரி நடிகையரும் பட்டாசாய் அணிவகுத்தனர்.

கன்னடத்துப் பைங்கிளிகள்

கன்னடத்துப் பைங்கிளிகள்

கர்நாடகா புல்டோசர்கள் மற்றும் பெங்கால் டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின்போது பல கன்னத்துப் பைங்கிளிகளைப் பார்க்க முடிந்தது.

அட.. இங்கேயும் பிரியா மணி

அட.. இங்கேயும் பிரியா மணி

தெலுங்கு வாரியர்ஸுக்காக குரல் கொடுத்த பிரியா மணி, கர்நாடக அணிக்காகவும் குரல் கொடுக்க வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

'ஸ்வீட்' ஸ்ரீதேவி

'ஸ்வீட்' ஸ்ரீதேவி

பெங்கால் டைகர்ஸ் அணிக்காக குரல் மற்றும் ஆதரவு தெரிவிக்க கணவர் போனி கபூருடன் வந்திருந்தார் ஸ்ரீதேவி.. அதே ஸ்டைல்.. அதே அழகு.. அதே 16 வயதினிலே மயிலாக.. ஒயிலாக..!

Story first published: Monday, January 27, 2014, 14:18 [IST]
Other articles published on Jan 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+