கில்கிறைஸ்ட் ஒன்றும் மந்திரவாதி அல்ல, செட்டிலாக டைம் தேவை-ப்ரீத்தி ஜிந்தா

நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் அணி அபாரமாக வீழ்த்தியது. இருப்பினும் தனது முதல் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸிடம் தோற்றுப் போயிருந்தது பஞ்சாப்.
இந்த நிலையில் கில்கிறைஸ்ட்டைப் புகழ்ந்துள்ள ப்ரீத்தி, அவர் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், கில்கிறைஸ்ட் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் மிகச் சிறந்த வீரர், கேப்டன். இருப்பினும் அவர் மந்திரவாதி இல்லை. எனவே சற்று அவகாசம் கண்டிப்பாக தேவை.
இன்னும் பல போட்டிகள் உள்ளன. எனவே அணி பலம் பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
அணியில் உள்ள அனைவருமே தங்களது திறமையை முழுமையாக வெளிக்காட்டி விளையாட வேண்டும். ஒவ்வொரு வீரரின் ஆட்டமும் முக்கியம் என்றார் ப்ரீத்தி ஜிந்தா.
Story first published: Thursday, June 7, 2012, 11:11 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications