
சென்சேஷன்
ஆனால், இந்த ஒலிம்பிக்கில் மெடலை ஜெயிக்கவில்லை என்றாலும், மெடல் ஜெயித்த பல போட்டியாளர்களை விட அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் அதிதி அசோக். பெண்கள் கோல்ஃப் போட்டியில் இவர் கட்டிய துல்லியமும், வேகமும், அசாத்திய நகர்வுகளும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை கோல்ஃப் விளையாட்டை பற்றியும் அதன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் குறித்து கூகுளில் சேர்ச் செய்ய வைத்திருக்கிறது. நெட்டிசன்களின் தற்போதைய சென்சேஷன் அதிதி அசோக் தான்.

பணக்காரர்கள் விளையாட்டா?
கோல்ஃப் பொதுவாக இந்தியர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு விளையாட்டு. இன்னும் சொல்லாப்போனால், சாமானியர்கள் மத்தியில் அது பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு என்பது போன்ற பார்வை இருந்து வருகிறது. அதனை தற்போது பிரேக் செய்திருக்கிறார் அதிதி. சேனல்களை மாற்றும்போது, தப்பித்தவறி கோல்ஃப் போட்டிகள் நடந்தாலும், நொடியில் மாற்றிவிடும் நம்மை, இதைப் பார்ப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி, டிவி முன்பு உட்கார வைத்துவிட்டார். அதிதி அசோக்கிற்காக கோல்ஃப் போட்டியை கண்டுகளித்தனர் கோடிக்கணக்கான இந்தியர்கள்.

சாதனைப் பெண்
கிரிக்கெட் போன்று பத்து பதினைந்து நாடுகள் விளையாடும் விளையாட்டல்ல கோல்ஃப் . உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் விளையாடும் விளையாட்டு இது. அதில் உலகின் முன்னணி வீராங்கனைகளோடு போட்டியிட்டு உலகத் தரவரிசையில் 200-வது இடத்தில் இருக்கும், 23 வயதே ஆன அதிதி அசோக் தொடர்ந்து 2-வது இடத்திலே நீடித்தபோதும் நேற்றைய மோசமான வானிலையால் 4-வது இடத்தை பிடித்து, 98% இந்தியர்கள் அறியாத கால்ஃப் விளையாட்டை அறிய செய்த சாதனைப் பெண்ணாக உருவெடுத்து இருப்பதாக சமூக தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வாழ்த்துகள்
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஜஸ்ட் கேப்பில் பதக்கத்தை தவறவிட்டாலும், கோல்ஃப் போட்டியை இந்தியர்கள் மத்தியில் அழுத்தம்திருத்தமாக விதைத்திருக்கிறார் அதிதி. இவரது இன்ஸபிரேஷனால், எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து பல கோஃப் வீரர், வீராங்கனைகளை நாம் எதிர்பார்க்கலாம். ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதமர் மோடி, மித்தாலி ராஜ், ஆனந்த் மஹிந்திரா, ஹர்ஷா போக்லே போன்ற பிரபலங்களும், நெட்டிசன்களும் அதிதியை குறிப்பிட்டு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

மாற்றி யோசித்த பெற்றோர்
பெங்களூரில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அதிதிக்கு கோல்ஃப் விளையாட்டை 5 வயதில் இருந்து விளையாடி வருகிறார். படிப்பு, வேலை, திருமணம் என்று தங்களை மகள்களை செட்டில் செய்யத்துடிக்கும் பெற்றோர்களுக்கு மாற்றாக, அதிதியின் பெற்றோர் அவரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஒலிம்பிக்கிற்கும் மாறி மாறி அவரது கோல்ஃப் கிட்-களை சுமந்து வருகின்றனர். 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில், அதிதி கிட் பையை அதிதியின் தந்தை சுமக்க, இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரது சுமந்து நின்றதை இந்த தேசமே பார்த்தது.

மீண்டு வாங்க
எதிர்காலத்தில் அதிதி எத்தனை மெடல்கள் வென்றாலும் சரி, வெல்லாவிட்டாலும் சரி.. இந்தியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில், கோல்ஃப் எனும் விளையாட்டை விதைத்ததில் இவரின் பங்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் மீண்டு(ம்) வாங்க அதிதி. மெடல் உங்களுக்காக அச்சிடப்பட காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











