Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹீமாவை கிண்டல் செய்யலாமா..... தடகள கூட்டமைப்புக்கு கண்டனம்!

டெல்லி: உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்திய ஹீமா தாஸை கிண்டல் செய்யும் தடகள கூட்டமைப்பின் டுவிட்டுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பின்லாந்தில் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேற்று நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் அசாம் மாநிலம் நாகோவான் மாவடம் திங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான ஹீமா தாஸ்.

AFI trolled for the tweet on hima das

அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதற்கொண்டு பலரும் அவருடைய சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தப் போட்டியின் அரை இறுதிக்குப் பிறகு, பேட்டியளித்தார் ஹீமா. அதில் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவில்லை. இதைக் குறிப்பிட்டு, இந்திய தடகள சம்மேளனம் ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்த டுவிட்டர் செய்திக்குதான் டுவிட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஹீமா பதக்கம் வெல்வதற்காக சென்றுள்ளார். ஆங்கிலம் பழகுவதற்கு அல்ல என்று சிலர் நெருப்பாக கொதித்துள்ளனர்.

இன்னும் ஏன் ஆங்கில அடிமைகளாக இருக்கிறீர்கள். நமது பெண் செய்த சாதனையைக் கொண்டாடுங்கள் என வேறு சிலர் குமுறியுள்ளனர்.

Story first published: Friday, July 13, 2018, 18:00 [IST]
Other articles published on Jul 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+