For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோத்துட்டா WWE-ஐ விட்டே போயிடுறேன், மேட்ச் போடலாமா? அதிர வைக்கும் சவால்.. அண்டர்டேக்கர் ரிட்டர்ன்ஸ்?

நியூயார்க் : WWE-இல் இருந்து அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றுவிட்டார் என அனைத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி சில வாரங்கள் தான் ஆகிறது.

Recommended Video

AJ Styles Challenges Undertaker

அதற்குள் அண்டர்டேக்கரை சண்டை போட அழைத்து, சவால் விட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஏஜே ஸ்டைல்ஸ்.

அண்டர்டேக்கருடன் கடைசியாக மோதியது ஏஜே ஸ்டைல்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போனியார்ட் போட்டி

போனியார்ட் போட்டி

2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே WWE நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரெஸ்ஸில்மேனியா தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. அதில் உச்சகட்ட போட்டியாக அமைந்தது அண்டர்டேக்கர் - ஏஜே ஸ்டைல்ஸ் இடையே நடந்த போனியார்ட் போட்டி.

சண்டைக் காட்சி

சண்டைக் காட்சி

அந்தப் போட்டி வழக்கமாக நடப்பது போல ரிங்கில் நடைபெறவில்லை மாறாக வெளிப் பகுதியில் நடைபெற்றது. திரைப்பட சண்டைக் காட்சி போலவே அந்த மோதல் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. பின்னணி இசையுடன் சேர்த்து அட்டகாசமாக இருந்தது.

கடைசிப் போட்டி குறியீடு

கடைசிப் போட்டி குறியீடு

அந்த போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ்-ஐ மண்ணில் போட்டு புதைத்தார் அண்டர்டேக்கர். அத்துடன் அந்தப் போட்டியில் வென்ற அண்டர்டேக்கர் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு தீப்பிழம்புக்கு நடுவே கிளம்பினார். அது அண்டர்டேக்கரின் கடைசிப் போட்டி என்பதற்கான குறியீடு என அப்போதே கூறப்பட்டது.

தி லாஸ்ட் ரைடு

தி லாஸ்ட் ரைடு

அதன் பின் அண்டர்டேக்கர் "தி லாஸ்ட் ரைடு" என்ற நிகழ்ச்சியில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் முடிவில் தான் இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தார். அத்துடன் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றதாகவே கருதப்பட்டது.

மறுபோட்டி நடக்குமா?

மறுபோட்டி நடக்குமா?

ஏஜே ஸ்டைல்ஸ் உடன் அண்டர்டேக்கர் கடைசிப் போட்டியில் ஆடிய நிலையில் அந்தப் போட்டிக்கு மறுபோட்டி நடக்குமா? என சில ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குத் தான் அடி போட்டுள்ளார் ஏஜே ஸ்டைல்ஸ்.

இன்டர்கான்டினென்ட் சாம்பியன்

இன்டர்கான்டினென்ட் சாம்பியன்

சமீபத்தில் இன்டர்கான்டினென்ட் சாம்பியன் பெல்ட்டை வென்றார் ஏஜே ஸ்டைல்ஸ். பல முறை WWE சாம்பியன்ஷிப், WWE ஹெவிவெய்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள அண்டர்டேக்கர் ஒருமுறை கூட இன்டர்கான்டினென்ட் சாம்பியன்ஷிப் வென்றதில்லை.

போட்டி போட தயாரா?

போட்டி போட தயாரா?

அதை வைத்தே அண்டர்டேக்கரை சீண்டி உள்ளார் ஏஜே ஸ்டைல்ஸ். என்னுடன் போட்டி போட தயாரா? என அண்டர்டேக்கரை சீண்டி உள்ள அவர், மேலும் ஒரு சவாலையும் விடுத்துள்ளார். இந்தப் போட்டியில் தோற்றால் தான் WWE-ஐ விட்டே விலகி விடுகிறேன் என்று கூறி உள்ளார்.

WWE-ஐ விட்டே போகவேண்டும்

WWE-ஐ விட்டே போகவேண்டும்

அதே சமயம், அண்டர்டேக்கர் தோல்வி அடைந்தால் அவர் WWE-ஐ விட்டே விலகி விட வேண்டும் என சவால் விட்டுள்ளார். ஓய்வு பெற்றதாக கருதப்பட்ட அண்டர்டேக்கருக்கு ஸ்டைல்ஸ் சவால் விட்டுள்ளதன் மூலம் WWE, அண்டர்டேக்கரை அத்தனை எளிதில் விடாது என்றே தோன்றுகிறது.

Story first published: Wednesday, July 29, 2020, 13:36 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
Undertaker returns : AJ Styles challenges Undertaker for intercontinenral championship match as he never won that in his long career.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+