Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டுக்கே பெருமை.. அதிர விட்ட அஜித் குமார்.. துபாய் பந்தயத்தில் 3வது இடம்.. ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்

துபாய்: துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அஜித் குமார் ஓட்டுநராக 414 ஆம் என்ன காரை ஓட்டி இருந்தார். அதற்காக அவருக்கு "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" என்ற விருது வழங்கப்பட்டது.

அந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட முக்கிய காரணமும் உள்ளது. அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் பிரேக் செயல் இழந்து விபத்தில் சிக்கியது. அதை தாண்டி அவர் மீண்டும் கார் ஓட்டிச் சென்றார். அதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதை அஜித் குமாரின் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.

ajith kumar car race dubai

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தனது இளமைக் காலம் முதலே கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். ஆனால், இதுவரை அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறாமல் இருந்து வந்தார். முதல் முறையாக ஒரு கார் பந்தயத்தில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.

திரை உலகத்தை சேர்ந்த பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரும் துபாயில் அவருடன் இந்த வெற்றியை கொண்டாடினர். நடிகர் மாதவன் துபாயில் இந்த கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்தார். அவர் அஜித் குமாரை நேரில் சென்று பாராட்டினார்.

அஜித் குமார் இந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் இந்த நேரில் வந்து கண்டு ரசித்தனர். இதை அடுத்து இந்த கார் பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இனி அஜித்குமாரை ஒவ்வொரு கார் பந்தயத்திற்கும் அழைக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இதுவரை ஜெர்மனி தான் அதிக கார் பந்தய ரசிகர்களை கொண்ட நாடு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இந்தியா தான் அதிக கார் பந்தை ஆர்வலர்களைக் கொண்ட நாடு எனவும் அவர்கள் கூறி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், அஜித் குமாரின் ரசிகர்கள் அனைவரும் தற்போது கார் பந்தய ரசிகர்களாக மாறி இருப்பது தான்.

Story first published: Sunday, January 12, 2025, 16:19 [IST]
Other articles published on Jan 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+