Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவுக்கு பட்டம் உண்டு, பெரியம்மாவுக்கு கிடைக்குமா?

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அரை இறுதியில் மோதும் அனைவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய ஓபனில் துவங்கி, பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என பயணித்து, கடைசியாக யுஎஸ் ஓபனில் முடியும்.

இந்த ஆண்டுக்கான கடைசி கிராண்ட் ஸ்லாமான யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில், நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு, அரை இறுதிக்கு நுழைந்துள்ள அனைவருமே அமெரிக்கர்களாக உள்ளனர்.

 நவ்ரத்திலோவா

நவ்ரத்திலோவா

1981 யுஎஸ் ஓபனின் அரை இறுதியில், கிரிஸ் எவர்ட், மார்ட்டினா நவரத்திலோவா, டிரேசி ஆஸ்டின், பார்பரா பாட்டர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, எவர்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். ஆஸ்டின் 3வது, நவரத்திலோவா, 4வது இடத்தில் இருந்தனர். பாட்டர் 11வது இடத்தில் இருந்தார். டிரேசி ஆஸ்டின் பட்டம் வென்றார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு

36 ஆண்டுகளுக்குப் பிறகு

36 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்துள்ள அனைவரும் அமெரிக்க பெண்களே. வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், கோகோ வாண்டவேகே, மேடிசன் கெய்ஸ் ஆகியோர் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

9வது இடத்தில் வீனஸ்

9வது இடத்தில் வீனஸ்

இதில் வாண்டவேகே, ஸ்டீபன்ஸ் தரவரிசையில் இல்லாதவர்கள், கெய்ஸ் 15வது இடத்திலும், வீனஸ் வில்லியம்ஸ் 9வது இடத்திலும் உள்ளனர்.

 பெரியம்மாவாக பதவி உயர்வு

பெரியம்மாவாக பதவி உயர்வு

செரீனா வில்லியம்ஸ்க்கு குழந்தை பிறந்ததால், பெரியம்மாவாக பதவி உயர்ந்துள்ள, 37 வயதாகும் வீனஸ், இந்த ஆண்டு, மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார். இந்த நான்கு பேரில்,வீனஸை தவிர மற்றவர்கள் கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாடியது இல்லை.

கிடைக்குமா

கிடைக்குமா

ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள பெரியம்மா வீனஸ் வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Thursday, September 7, 2017, 18:57 [IST]
Other articles published on Sep 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+