Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சிறைக்குப் போனதால் வருத்தம்- அமெரிக்க வீரர் தற்கொலை

சால்ட்லேக் நகரம்:
அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர், ஜெரட் பீட்டர்சன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அமெரிக்காவின் பிரபல பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் ஜெரட் பீட்டர்சன் (29). சமீபத்தில் கனடாவில் நடந்த பிரிஸ்டைல் பனிச் சறுக்கு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் நேற்று தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன், ஹேய்லி வழியாக குடித்துவிட்டு 25 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 70 கி.மீட்டர் வேகத்தில் சென்றார் ஜெரட். இதற்காக கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்ட பீட்டர்சன், 3 நாட்களுக்கு பின் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டார். இதில் மனமுடைந்த பீட்டர்சன், தற்கொலை செய்துக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

சமீபகாலமாக உத்தா என்ற இடத்தின் பார்க் சிட்டியில் வசித்து வந்த பீட்டர்சன், சால்ட் லேக் பகுதியில் உள்ள வேஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில் படித்து வந்தார். வரும் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ளும் திட்டம் எதுவும் அவருக்கு இருக்கவி்ல்லை என ஸ்கி பனி விளையாட்டு சங்கத்தினர் தெரிவித்தனர்.

சிறுநீர் கழித்தற்காக வழக்கில் சிக்கியவர்

முன்னதாக, போய்ஸ் பகுதியின் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக 2008ம் ஆண்டிலும், திருட்டுப் பொருட்களை வாங்கியதாக 2006ம் ஆண்டிலும் பீட்டர்சன் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:48 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+