Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்டைப் பெட்டியில் "கட்டில்".. வீரர்களின் "செக்ஸ்" கனவுக்கு.. "ஆப்பு" வைத்த டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களின் செக்ஸ் கனவுக்கு ஆப்பு வைக்கப்பட்டு இருக்கிறதோ என்று இந்த புகைப்படங்களை பார்த்தால் எண்ணத் தோன்றுகிறது.

Recommended Video

Condom கிடையாது.. ஆனால் மது கிடைக்கும்.. Tokyo Olympics-ல் புதிய கட்டுப்பாடு

வரும் ஜுலை. 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த 2020ம் ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக், போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு

இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. குறிப்பாக, ஒலிம்பிக் கிராமத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் வீர்களிடையே பீதி நிலவுகிறது. இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு ஏன் காண்டம் வழங்கப்படுகிறது என்பது குறித்து கடந்த சில கட்டுரைகளில் பார்த்துவருகிறோம். அதாவது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் உடலுறவு

அதிகம் உடலுறவு

பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் காண்டம் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. ஆனால், தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்கள் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடுவதாக நமது முந்தைய கட்டுரைகளில் பார்த்திருந்தோம்.

உல்லாசத்துக்கு நோ

உல்லாசத்துக்கு நோ

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு என தயார் செய்யப்பட்டிருக்கும் கட்டில்கள் அட்டைப்பெட்டிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அமெரிக்க வீரர் இந்த கட்டில்களின் புகைப்படங்களை பகிர்ந்த பிறகு, ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களின் இத்தகைய ஐடியா வெளிச்சத்துக்கு வந்துள்ளது. என்னது.. அட்டைப்பெட்டியில் கட்டில் எதற்காக தயாரித்தார்கள் என்று புரியலையா? என்னங்க நீங்க... இன்னுமா புரியல? வீரர்கள் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருக்க விரும்பினாலும், கட்டில் தாக்குப்பிடிக்க வேண்டும் அல்லவா? அட்டைப்பெட்டி கட்டிலில் என்ன செய்ய முடியும்? அதற்கு தான் இத்தகைய ஐடியா. (அடேங்கப்பா!)

160,000 காண்டம்ஸ்

160,000 காண்டம்ஸ்

அமெரிக்க வீரர் பால் செலிமோ இந்த படுக்கையின் படங்களை பகிர்ந்து, "டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் நிறுவப்படவுள்ள படுக்கைகள் அட்டைப் பெட்டியால் செய்யப்பட்டுள்ளன, இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். எனினும், போட்டி முடிந்த பிறகு, டோக்கியோவில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் கிளம்பும் போது காண்டம் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டோக்கியோ 2020 இன் ஏற்பாட்டாளர்கள், நான்கு காண்டம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 காண்டம்களை வழங்குகின்றனர்.

Story first published: Monday, July 19, 2021, 13:31 [IST]
Other articles published on Jul 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+