ஒரே கிட்னியோட உச்சியை எட்டினேன்... ஆனாலும் நான் அதிர்ஷ்டசாலி... அஞ்சு ஜார்ஜ் டிவீட்!
கோட்டயம் : தான் ஒரே கிட்னியுடன்தான் தன்னுடைய வெற்றிப் பாதையில் வெற்றிகளை பெற்றதாக இந்திய முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ல் பாரீசில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார் அஞ்சு ஜார்ஜ்.
தொடர்ந்து இந்தியாவிற்காக பல்வேறு பதக்கங்களை வென்ற அவர், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார்.

வெண்கலம் வென்ற அஞ்சு ஜார்ஜ்
கடந்த 2003ல் பாரீசில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கத்தை வென்றவர் கேரளாவை சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கத்தை வென்ற அவர், தொடர்ந்து பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

உண்மையை வெளிப்படுத்திய அஞ்சு
இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தன்னுடைய டிவிட்டர் மூலம் ஒரு உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தான் அந்த போட்டிகளில் கலந்து கொண்டபோது ஒரே கிட்னியுடன் தான் விளையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் கூறியுள்ளார்.

மாத்திரைகளால் ஒவ்வாமை
கேரளாவின் கோட்டயத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவரும் அஞ்சு ஜார்ஜ், தன்னுடைய வெற்றிப் பாதைகளில் உச்சத்தை தான் அடைந்த போது தனக்கு ஒரேயொரு கிட்னி தான் இருந்ததாகவும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்கும்போது ஒவ்வாமை உள்ளிட்டவற்றை தான் எதிர்கொண்டதாகவும் கூறினார்.

பயிற்சியாளர் காரணம்
இத்தகைய தடைகளை மீறி தான் உச்சத்தை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தன்னுடைய பயிற்சியாளர் மற்றும் அவருடைய திறமை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அஞ்சு ஜார்ஜின் இந்த டிவீட் அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications