Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி சேர்மனாக சீனிவாசன் பதவியேற்பதில் சிக்கல் தீர்ந்தது

டெல்லி: ஐசிசி சேர்மனாக என்.சீனிவாசன் பொறுப்பேற்பதற்கு தடைவிதிக்க கோரும் வழக்கை அவசர வழக்காக, கருதி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக சீனிவாசன், கடந்த 2011 முதல் பதவி வகித்துவந்தார். இந்தியன், பிரிமியர் லீக் கிரிக்கெட் சூதாட்டத்தில், சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒதுங்கினார்.

Apex Court refuses urgent hearing on plea against Srinivasan

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதனிடையே இம்மாதம் 27ம்தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய சேர்மனாக சீனிவாசன் பொறுப்பேற்க இருக்கிறார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், சீனிவாசன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் பொறுப்பேற்க தயாராகினார். இதற்கு எதிராக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐபிஎல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள், ஜே.எஸ்.கேகர் மற்றும் சி.நாகப்பன் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. பீகார் கிரிக்கெட் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை சீனிவாசன் ஏற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பையும் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக் காட்டினார்.

எனினும் சீனிவாசன் பதவி ஏற்பதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே வழங்கிய கோர்ட் உத்தரவு மிகவும் தெளிவாக, குழப்பம் இல்லாமல் உள்ளபோது அவசரமாக இதை விசாரிக்க அவசியம் இல்லை என்று கூறி வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி இன்று இவ்வழக்கு நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், கோடை விடுமுறை முடிந்து நீதிமன்ற வழக்கமான அலுவல்கள் துவங்கிய பிறகு விசாரணை நடத்திக்கொள்ளாலம் என்று கூறிவிட்டது. இதனால் சீனிவாசன் ஐசிசி சேர்மனாக பதவியேற்பதில் இருந்த தடை விலகியுள்ளது.

Story first published: Monday, June 16, 2014, 19:21 [IST]
Other articles published on Jun 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+