Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நொடி வரை திக்.. திக்.. இம்மியளவு கேப்பில் வென்ற தீபிகா குமாரி - சஸ்பென்ஸின் உச்சக்கட்டம்

ஜப்பான்: இப்படியொரு த்ரில்லான மேட்சை நீங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கண்டிருக்க மாட்டீர்கள். லைவாக பார்க்கும் வாய்ப்பை தவற விட்டவர்கள் உண்மையில் பாவம் தான்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதக்கம் வெல்வதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது எனலாம்.

இந்தியா சார்பில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் முன்னுரை எழுதினார். அதன்பிறகு தற்போது வரை இந்தியா அடுத்த மெடலை கைப்பற்ற கடுமையாக முயற்சித்து வருகின்றது.

 11 தங்கம்

11 தங்கம்

இன்றைய நிலவரப்படி, ஜப்பான் தங்கம் 11, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா தங்கம் 10 வெள்ளி 10, வெண்கலம் 9 என மொத்தம் 29 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. சீனா தங்கம் 10, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 23 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

 முதல் செட்டில் தோல்வி

முதல் செட்டில் தோல்வி

இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் வில்வித்தைப் போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி த்ரில் வெற்றிப் பெற்றுள்ளார். 1/16 வெளியேற்றுதல் பிரிவில் அமெரிக்காவின் Jennifer Mucino-Fernandez-ஐ தீபிகா எதிர்கொண்டார். இதில், முதல் செட்டில் 25 - 26 என்ற கணக்கில் தீபிகா தோல்வி அடைந்தார்.

 கம்பேக்

கம்பேக்

இதையடுத்து நடந்த இரண்டாவது சுற்றில், 28 - 25 என்று வலிமையான கம்பேக் கொடுத்து தீபிகா வென்றார். பிறகு 3வது சுற்றிலும் தீபிகா 27-25 என்ற கணக்கில் வென்றார். இதனால், 4-2 என்ற கணக்கில் தீபிகா முன்னிலை வகித்தார். பிறகு பரபரப்பாக நடந்த 4வது சுற்றில் 24 - 25 என்று ஜெனிஃபர் வென்றார்.

 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

3வது சுற்றுக்கு முன்னேற்றம்

வெற்றியை தீர்மானிக்கும் 5வது மற்றும் இறுதி செட்டில் 26 - 25 என்று தீபிகா வெற்றிப் பெற, 6 - 4 என்ற கணக்கில் வென்று, 1/8 வெளியேற்றுதல் சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இன்று புதன்கிழமை இந்தியா பங்கேற்ற போட்டிகளில், குத்துச்சண்டையில் பூஜா ராணி வெற்றிக்கு பிறகு, நடந்த அற்புதமான நிகழ்வு என்றால் அது தீபிகா குமாரியின் அற்புதமான வில்வித்தை போட்டிகள் தான்.

Story first published: Wednesday, July 28, 2021, 20:03 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+