Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி-மீண்டும் 2வது இடத்தில் இந்தியா-இன்று மேலும்2 தங்கம்

டெல்லி: இந்தியாவுக்கு இன்று மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து மீண்டும் அது 2வது இடத்தைப் பிடித்து இங்கிலாந்து, 3வது இடத்திற்குத் தள்ளி விட்டுள்ளது.

நேற்றைய பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. 2வது இடத்தில் இங்கிலாந்து இருந்தது. இரு நாடுகளும் தலா 24 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருந்தாலும், மொத்தப் பதக்கங்கள் அடிப்படையில் இங்கிலாந்து 2வது இடத்தைப் பிடித்திருந்தது.

ஆனால் இன்று மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா மீண்டும் 2வது இடத்திற்கு முன்னேறியது.

இன்று வில்வித்தைப் போட்டியில், தீபிகா குமாரி தங்கம் வென்றார்.

அதேபோல டோலா பானர்ஜி 3வது இடத்திற்கான போட்டியில் மலேசியாவின் அன்பரசி சுப்ரமணியத்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மறுபுறம், 3 தங்கம் வென்றுள்ள விஜய்க்குமார் இன்று 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டர் பிரிவில், சக நாட்டு வீரரான ஹர்ப்ரீத் சிங்கிடம் தோல்வியுற்றார். ஹர்ப்ரீத்துக்கு தங்கமும், விஜய்க்குமாருக்கு வெள்ளியும் கிடைத்தன.

தற்போது இந்தியா 26 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 56 தங்கம், 31 வெள்ளி, 34 வெண்கலத்துடன் 121 பதக்கங்களைக் குவித்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து 24 தங்கம், 45 வெள்ளி, 29 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் உள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+