வில்வித்தை உலகக் கோப்பை.. இந்திய கூட்டணி ஹாட்ரிக் சாதனை.. தங்கம் வென்று அசத்தல்
யேச்சியோன் : 2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கூட்டு வில்வித்தை அணி தங்கப் பதக்கம் வென்றது.
2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் முன்னணி மகளிர் கூட்டு வில்வித்தை அணியான இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் மற்றும் அதிதி சுவாமி ஆகிய மூவர் கூட்டணி இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தது. இதே மூவர் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக வில்வித்தையில் உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே தொடரில் இந்திய கலப்பு அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

வில்வித்தையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும் இந்திய கூட்டு மகளிர் அணியின் ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் மற்றும் அதிதி சுவாமி கூட்டணி, துருக்கியின் அசல் ஹசல் புருன், அய்ஸ் பெரா சுசர் மற்றும் பேகம் யுவா ஆகியோருக்கு எதிராக விளையாடி ஆதிக்கம் செலுத்தி, ஒரு செட்டை கூட தவறவிடாமல் அபார வெற்றி பெற்றது.
இதே மூவர் கூட்டணி கடந்த மாதம் ஷாங்காயில் நடந்த உலகக்கோப்பை ஸ்டேஜ் ஒன் தொடரில் இத்தாலி அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று இருந்தது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தங்கம் வென்று இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் சென்று சாதனை படைத்துள்ளது இந்த கூட்டணி.
தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்றுள்ள இந்த மூவர் கூட்டணி அடுத்து ஒலிம்பிக் தொடரிலும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications