Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டைனா வென்றால் ரிஹானாவிடம் கணவரை வாடகைக்கு விடத் தயாராக இருந்த கோலியின் மனைவி!

ரியோ டிஜெனீரோ: அர்ஜென்டைனா அணி உலகக் கோப்பையை வென்றால் தனது கணவரை ஒரு வாரத்துக்கு பிரபல பாடகி ரிஹானாவிடம் ஒரு வாரத்துக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அர்ஜென்டைனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமிரோவின் மனைவி. ஆனால் அதற்கெல்லாம் வேலையே இல்லாமல் போய் விட்டது. கடைசியில் இந்த ரொமிரோவால்தான் அர்ஜென்டைனா தோல்வியைத் தழுவ நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் கை விட்டு விட்ட நிலையில் கடைசி சான்ஸாக அர்ஜென்டைனாவை மலை போல நம்பியிருந்தனர் தென் அமெரிக்க கால்பந்து ரசிகர்கள். பிரேசில் விட்டதை பக்கத்து நாடான அர்ஜென்டைனா பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அர்ஜென்டைனாவும் கைவிட்டு விட்டது.

அர்ஜென்டைனா அணியின் கோல் கீப்பர் ரொமிரோவின் மனைவி கூட தனது அணி வென்றால் தனது கணவரை ரிஹானாவிடம் ஒரு வாரத்துக்கு அனுப்பி வைப்பதாக கூட அதிரடியாக ஆஃபரும் அறிவித்திருந்தார். கடைசியில் எல்லாம் போண்டியாகி விட்டது.

3வது முறையாக வென்றால்

3வது முறையாக வென்றால்

இதுகுறித்து ரொமிரோவின் மனைவியான, 36 வயது எலியானா குயர்சியோ அல் அரேபியா டிவிக்கு அளித்த பேட்டியில், அர்ஜென்டைனா 3வது முறையாக கோப்பையை வென்றால் அதை விட எனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இருக்க முடியாது.

ரிஹானாவிடம் அனுப்ப ரெடி

ரிஹானாவிடம் அனுப்ப ரெடி

எனது அணி மட்டும் கோப்பையை வென்றால், நான் எனது கணவர் ரொமிரோவை ரிஹானாவுடன் ஒரு வாரம் தங்க அனுமதிப்பேன்.

சந்தோஷமாக இருந்து விட்டு வரட்டும்

சந்தோஷமாக இருந்து விட்டு வரட்டும்

அர்ஜென்டைனா வென்றால் எனது கணவர் சந்தோஷமாக ரிஹானாவுடன் ஒரு வாரத்தைக் கழிக்கலாம். நானே வழியனுப்பி வைப்பேன் என்று கூறியிருந்தார் எலியானா.

ரொமிரோவுக்கு ரூட் விட்ட ரிஹானா

ரொமிரோவுக்கு ரூட் விட்ட ரிஹானா

முன்னதாக தனக்கு ரொமிரோவை ரொம்பப் பிடிக்கும் என்று பாடகி ரிஹானவே கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதை மனதில் வைத்துத்தான் இப்படி ஒரு பேட்டியை அளித்திருந்தார் எலியானா.

அரை இறுதியில் அசத்திய ரொமிரோ

அரை இறுதியில் அசத்திய ரொமிரோ

அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியின் கோல் முயற்சிகளை அழகாக தடுத்து தனது அணியை வெற்றி பெற வைத்தவர் ரொமிரோ என்பது நினைவிருக்கலாம்.

இறுதிப் போட்டியில் சொதப்பினார்

இறுதிப் போட்டியில் சொதப்பினார்

ஆனால் இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் ஜெர்மனியை ஒரு கோல் போட அவர் விட்டு விட்டார். அந்த கோலை மட்டும் தடுத்திருந்தால் நிச்சயம் பெனால்டி வாய்ப்பு கிடைத்து அர்ஜென்டைனாவுக்கு வெற்றி வாய்ப்பும் கூட கிடைத்திருக்கலாம்.

பாவம் ரிஹானா.. நல்லதொரு ஆஃபர் போச்சு!

Story first published: Monday, July 14, 2014, 12:57 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+