தோஹா:கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் நடந்து வந்த 15வது ஆசிய விளையாட்டுப்போட்டி முடிவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தையும், இந்தியா 8-வதுஇடத்தையும் பிடித்தன.
தோஹாவில் கடந்த 1ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.போட்டி ஆரம்பத்திலிருந்தே இந்தியா பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தது.அவ்வப்போது தங்கம், அடிக்கடி வெள்ளி, வெண்கலம் என பதக்க வேட்டையைநடத்தி வந்தனர் இந்திய வீரர், வீராங்கனைகள்.
கோலாகலமாக நடந்து வந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்றுடன்முடிவடைந்தது. இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு நாள்நிகழ்ச்சி நடந்தது.
மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தைப்பெற்றது. 165 தங்கம், 88 வெள்ளி, 63 வெண்கல உள்பட மொத்தம் 316பதக்கங்களை அது வென்றது.
தென்கொரியா 2வது இடத்தையும், ஜப்பான் 3வது இடத்தையும் பெற்றன.இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்தது. இந்திய அணி 10 தங்கம், 18 வெள்ளி, 26வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.
இந்திய வீரர் ஜஸ்பால் ராணா அதிக தங்கப் பதக்கங்களை (3) வென்று சாதனைபடைத்தார். அதேபோல டென்னிஸ், செஸ் ஆகியவற்றிலும் இந்திய வீரர்,வீராங்கனைகள் தங்கம் குவித்தனர்.
கபடியில் தொடர்ந்து 5வது முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது.தடகளத்திலும் இந்திய அணி முத்திரை பதித்தது. ஆடவர் ஹாக்கியில் இந்தியாவுக்குஅவமானமே கிடைத்தது. இருப்பினும் மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்ககத்தைவென்று ஆறுதல் கொடுத்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீரர் விருது இந்தியாவைச் சேர்ந்தஜஸ்பால் ராணாவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரைத் தவிர மேலும்6 வீரர்களின் பெயர்களும் அதில் அடிபட்டன. இந்த நிலையில் தென் கொரிய நீச்சல்வீரர் தவன்பார்க் முதலிடத்தைப் பெற்று விருதை வென்றார். ராணாவுக்குவாக்கெடுப்பில் 3வது இடமே கிடைத்தது.
நிறைவு விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கலீபாஸ்டேடியத்தில் கூடி கண்டு களித்தனர்.