Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் கொரியாவின் கோலாகலமாக தொடங்கிய 17வது ஆசிய விளையாட்டுப் போட்டி

இன்சியான்: 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் இன்று கோலகலமாக தொடங்கியது. கொரியன் பாப் பாடகர் கங்னம் ஸ்டைல் புகழ் சை நடனமாடி பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தினார்

இன்று முதல் 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது.

இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.

சின்னம் ‘மேஸ்காட்’

சின்னம் ‘மேஸ்காட்’

போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல் நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ, விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட சின்னத்தை தேர்வு செய்துள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

இலச்சினை

இலச்சினை

போட்டிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை ஆசியாவின் முதல் எழுத்தான ‘ஏ' வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ‘ஏ' வின் இடது மேற்பகுதியில் சூரியன் இடம்பெற்றுள்ளது. ஆசிய மக்கள் வானத்தை தங்களின் கையில் பிடித்திருப்பதைக் குறிக்கும் வகையில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

45 நாடுகள்

45 நாடுகள்

ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

36 வகையான போட்டிகள்

36 வகையான போட்டிகள்

36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுகின்றன. மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும்.

9500 அறைகள்

9500 அறைகள்

வீரர்களின் பயிற்சிக்காக 54 பயிற்சி மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு கிராமத்தில் வீரர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக 9,500 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க விழா

தொடக்க விழா

இன்சியானில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மைதானத்தில் (இன்சியான் ஆசியாட் ஸ்டேடியம்) 61 ஆயிரத்து 74 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்கியது.

கங்னம் ஸ்டைல்

கங்னம் ஸ்டைல்

கங்னம் ஸ்டைல் பாப் பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற கொரியன் பாப் பாடகர் சை நடனம் பாடல்கள் பாடியும் நடனம் ஆடியும் பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

ரூ.9870 கோடி செலவு

ரூ.9870 கோடி செலவு

இன்று தொடக்க நாள் என்பதால் எந்தப் போட்டியும் கிடையாது. நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக உத்தேசமாக ரூ.9870 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் 616 வீரர்கள்

இந்தியாவின் 616 வீரர்கள்

இந்தியாவில் இருந்து 679 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 516 பேர் வீரர், வீராங்கனைகள். எஞ்சியவர்கள் பயிற்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆவர்.

பங்கேற்கும் போட்டிகள்

பங்கேற்கும் போட்டிகள்

நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, படகுப் போட்டி (கேனோயிங், கயாகிங், ரோவிங், யாட்சிங்), சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், மல்யுத்தம், ஊஷூ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கடும் சவால்

கடும் சவால்

கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம் உள்பட 64 பதக்கங்களைக் குவித்த இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது.

70 பதங்கங்களை வெல்ல வாய்ப்பு

70 பதங்கங்களை வெல்ல வாய்ப்பு

கடந்த முறையைவிட இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நம்பிக்கை தெரிவித்துள்ளது. "காமன்வெல்த் போட்டியில் 64 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வரை இந்தியர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம்" என சாய் இயக்குநர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் பதக்க வேட்டை

இந்தியர்களின் பதக்க வேட்டை

பாட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் சில பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச்சண்டை, மல்யுத்தம், கபடி ஆகியவற்றில் இந்த முறையும் இந்தியர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என நம்பப்படுகிறது.

கலக்கல் கபடி

கலக்கல் கபடி

கபடியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் அணி, இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மகளிர் அணிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. இதுதவிர டென்னிஸிலும் பதக்க வாய்ப்புள்ளது.

ஹாக்கியில் பதக்கம்

ஹாக்கியில் பதக்கம்

ஹாக்கி போட்டியைப் பொறுத்தவரையில் 1988-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லவில்லை. இந்தமுறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் உள்ளது சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி. தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுவிடலாம்.

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரையில் அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் கடந்த முறை நழுவவிட்ட தங்கப் பதக்கத்தை இந்த முறை வெல்லும் முனைப்பில் உள்ளனர். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் ஆகியவற்றில் பதக்கம் வென்றுவிட்ட பிந்த்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் ஒரு பதக்கம்கூட வென்றதில்லை. அவருக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம் என்பதால் அவர் தங்கம் வெல்ல முயற்சிப்பார்.

Story first published: Friday, September 19, 2014, 17:20 [IST]
Other articles published on Sep 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+