For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான்காரர் தள்ளி விட்டுட்டார்... அதனால தங்கம் மிஸ் ஆயிடுச்சு... ஆசிய விளையாட்டில் சர்ச்சை

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏழாம் நாளான இன்று காலை மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜப்பானின் ஹிரோடோ இனோய் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். பஹ்ரைனின் எல்ஹாசான் எல்அப்பாசி இரண்டாம் பிடித்து வெள்ளி வென்றார்.

இந்த போட்டியின் போது, ஜப்பான் வீரர், பஹ்ரைன் வீரரை கடைசி சில மீட்டர் தூரம் இருக்கும் போது தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜப்பான் அணியும் பதிலுக்கு புகார் அளித்துள்ளது. இந்த போட்டியின் நடுவர் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

Asian Games 2018 - Controversy in Martathon game after top 2 runners complain each other

இந்த போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த இருவரும், போட்டி தூரமான 42 கிலோமீட்டரை, 2 மணி நேரம், 18 நிமிடம், 22 நொடிகளில் கடந்தனர். ஹிரோடோ வெற்றிக் கோட்டை நொடிக்கும் குறைவான வித்தியாசத்தில் முதலில் தொட்டதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

கடைசி 100 மீட்டர் தூரம் இருக்கும் போது எல்அப்பாசி, ஹிரோடோ-வை முந்த முயன்றுள்ளார். நெருக்கமாக ஓடிய இருவரும் அப்போது இடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதனால், எல்அப்பாசி சிறிது பின்தங்கி உள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

இருவரும் போட்டி தூரத்தை நொடிக்கும் குறைவான வித்தியாசத்தில் கடந்த நிலையில், ஜப்பான் வீரர் தன்னை இடித்ததால் தான் தங்கத்தை இழந்து விட்டதாக பஹ்ரைன் வீரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிலுக்கு ஜப்பான் அணி இடைவெளியே இல்லாத நிலையில் எல்அப்பாசி முந்த முயன்றார் என புகார் அளித்துள்ளது. போட்டி நடுவர் வாடிம் நிக்மாடோவ் இரண்டு அணிகளின் புகார்களையும் நிராகரித்துள்ளார்.

இந்த ஆசிய விளையாட்டில் பஹ்ரைன் வென்ற முதல் பதக்கம் எல்அப்பாசி வென்ற வெள்ளி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 27, 2018, 12:42 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Asian Games 2018 - Controversy in Martathon game after top 2 runners complain each other
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+