ஜகார்த்தா : இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஏழு நாட்களாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இதுவரை 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் வென்று தந்துள்ளார்கள்.
நேற்று ஏழாம் நாள், அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதியான மூன்று ஸ்குவாஷ் வீரர்கள், அரையிறுதியில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வெண்கலத்தோடு திரும்பினர்.

அதன் பின் நாளின் முடிவில் ஷாட் புட்டில் இந்திய வீரர் தாஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெரிய ஆறுதல் அளித்தார். அந்த போட்டியில் 20.75 மீட்டர் தூரம் ஷாட் புட் வீசி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக தூரம் ஷாட் புட் வீசிய சாதனையை முறியடித்தார்.
இன்று எட்டாம் நாள், இந்தியா பல போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அவற்றின் நேர அட்டவணையை கீழே காணலாம்.
பாட்மிண்டன்
மதியம் 12.30 - மகளிர் ஒற்றையர் காலிறுதி - சாய்னா நேவால்
மதியம் 01.30 - மகளிர் ஒற்றையர் காலிறுதி - பி.வி.சிந்து
(நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)
தடகளம்
காலை 9.00 - மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் - ஜவுனா முர்மு, அனு ராகவன்
காலை 9.30 - ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் - தருண் அய்யாசாமி, சந்தோஷ் குமார்
மாலை 5.10 - ஆடவர் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்று - ஸ்ரீஷங்கர்
மாலை 5.30 - மகளிர் 400 மீட்டர் ஓட்டம் இறுதிச் சுற்று - ஹீமா தாஸ், நிர்மலா ஷெரான்
மாலை 5.40 - ஆடவர் 400 மீட்டர் ஓட்டம் இறுதிச் சுற்று - முகம்மத் ஏனாஸ், ஆரோக்ய ராஜீவ்
மாலை 5.50 - ஆடவர் 1000 மீட்டர் ஓட்டம் இறுதிச் சுற்று - லக்ஷ்மணன்
மாலை 4.00 - மகளிர் 100 மீட்டர் அரையிறுதிச் சுற்று - டுட்டி சந்த்
மாலை 7.40 - மகளிர் 100 மீட்டர் இறுதிச் சுற்று
வில்வித்தை
காலை 9.20 - ஆடவர் அணி காம்பவுண்ட் - 16 அணி சுற்று - இந்தியா x கத்தார்
மதியம் 12.10 - மகளிர் அணி காம்பவுண்ட் - காலிறுதி
துப்பாக்கி சுடுதல்
காலை 6.30 - ஸ்கீட் - மகளிர் பிரிவு தகுதிச் சுற்று - ராஷ்மி ரத்தோர், கணேமாத் செகோன்
காலை 7.30 - ஸ்கீட் - ஆடவர் பிரிவு தகுதிச் சுற்று - அங்காட் வீர் சிங், ஷீராஸ் ஷேக்
குத்துச்சண்டை
காலை 5.45 - ஆடவர் லைட்வெயிட் 60 கிலோ - சிவா தாப்பா
மதியம் 2.15 - ஆடவர் வெல்டர்வெயிட் 57 கிலோ - மனோஜ் குமார்
மதியம் 3.30 - மகளிர் பிளைவெயிட் 51 கிலோ - சர்ஜுபாலா தேவி
ஹாக்கி
மாலை 4.30 - ஆடவர் பிரிவு - இந்தியா x தென் கொரியா
செபக்டக்ராவ்
காலை 8.30 - ஆடவர் ரேகு குரூப் சுற்று - இந்தியா x மலேசியா
மதியம் 2.30 - ஆடவர் ரேகு குரூப் சுற்று - இந்தியா x சீனா
டேபிள்டென்னிஸ்
காலை 8.30 - மகளிர் அணி குரூப் சுற்று - இந்தியா x கத்தார்
மதியம் 12.30 - மகளிர் அணி குரூப் சுற்று - இந்தியா x சீனா
மாலை 4.30 - மகளிர் அணி குரூப் சுற்று - இந்தியா x ஈரான்
மதியம் 2.30 - ஆடவர் அணி குரூப் சுற்று - இந்தியா x ஐக்கிய அரபு அமீரகம்
மாலை 6.30 - ஆடவர் அணி குரூப் சுற்று - இந்தியா x சீன தைபெய்
வாலிபால்
காலை 11.00 - ஆடவர் பிரிவு - இந்தியா x ஜப்பான்
பாய்மரப் படகுப் போட்டி
காலை 10.40 - ஓபன் லேசர் - கோவிந்த் பைராகி, ஹர்ஷிதா டோமர்
காலை 10.44 - கலப்பு RS ONE - டய்னா கோல்ஹோ, காட்யா கோல்ஹோ
காலை 10.30 - 49er ஆடவர் பிரிவு - வருண் அசோக் தக்கார், கணபதி கேளபண்டா
காலை 10.35 - 49er FX மகளிர் பிரிவு - வர்ஷா கௌதம், ஸ்வேதா செர்வேகர்
காலை 10.35 - லேசர் ரேடியல் - நேத்ரா குமணன்
கைப்பந்து
காலை 9.30 - ஆடவர் முக்கிய சுற்று - இந்தியா x தைபெய்
பிரிட்ஜ்
காலை 8.00 - ஆடவர் பிரிவு அரையிறுதி 1
மதியம் 12.00 - ஆடவர் பிரிவு அரையிறுதி 2
மதியம் 02.45 - ஆடவர் பிரிவு அரையிறுதி 3
காலை 8.00 - கலப்பு பிரிவு அரையிறுதி 1
மதியம் 12.00 - கலப்பு பிரிவு அரையிறுதி 2
மதியம் 02.45 - கலப்பு பிரிவு அரையிறுதி 3
ஈக்குவெஸ்டேரியன்
காலை 11.30க்கு தொடங்கும் - தனிப் பிரிவு - இறுதிப் போட்டி
காலை 11.30க்கு தொடங்கும் - குழு பிரிவு - இறுதிப் போட்டி
கேனோ
காலை 8.30 - கேனோ 500 மீட்டர் மகளிர் பிரிவு - ஹீட் 2
காலை 8.50 - கேனோ 500 மீட்டர் ஆடவர் பிரிவு - ஹீட் 1
கோல்ப் (பதக்கச் சுற்று)
காலை 4.30 - மகளிர் தனிப் பிரிவு - நான்காம் சுற்று
காலை 4.30 - மகளிர் குழுப் பிரிவு - நான்காம் சுற்று
காலை 4.30 - ஆடவர் தனிப் பிரிவு - நான்காம் சுற்று
காலை 4.30 - ஆடவர் குழுப் பிரிவு - நான்காம் சுற்று