ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் தீபக் குமார்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டியில், தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்தோனேஷியாவில், ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 18ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபக் குமார் 247.7 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். சீன வீரர் யாங் ஹாவோரன் 249.1 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
[ஆசிய விளையாட்டு 2018 இந்திய வெற்றியாளர்கள்]

இதுவரையிலான பதக்கப் பட்டியலில் இந்திய அணி தலா 1 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்துடன், 8வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
Story first published: Monday, August 20, 2018, 12:49 [IST]
Other articles published on Aug 20, 2018


Click it and Unblock the Notifications