ஆசிய விளையாட்டு : தீபிகா பல்லிகல் வெண்கலம் வென்றார்…ஸ்குவாஷ் அரையிறுதியில் தோல்வி
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் தோல்வி அடைந்தார். காலிறுதி வெற்றி மூலம் வெண்கலம் வென்றார்.
ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஆறு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற மலேசியாவின் நிக்கோல் டேவிட்-இடம் 3-0 என தோல்வி அடைந்தார் தீபிகா. இதன் மூலம் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு 26வது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இதுதான் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்குவாஷ் விளையாட்டில் மேலும் இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோர் அரையிறுதியில் அடுத்து பங்கேற்க உள்ளனர். அவர்கள் தோல்வி அடைந்தாலும் வெண்கலம் கிடைக்கும். எனவே, இன்று இந்தியாவின் பதக்கங்கள் மேலும் உயரும். இந்தியா இதுவரை 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications