ஆசிய விளையாட்டு : டுட்டீ சந்த் இரண்டாவது வெள்ளி…மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் வென்றார்
ஜகார்த்தா : மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் இந்தியாவின் டுட்டீ சந்த். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தன் 52வது பதக்கத்தை பெற்றது.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்த் ஏற்கனவே வெள்ளி வென்றார். இந்த நிலையில், 200 மீட்டர் ஓட்டத்திலும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை நிறைவேற்றும் வகையில் இன்று மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.

இதே மகளிர் 200மீட்டர் தகுதிச் சுற்றில் மற்றொரு முன்னணி வீராங்கனையான ஹீமா தாஸ் தகுதிச் சுற்றில் தகுதி இழந்தார். இந்நிலையில் டுட்டீ சந்த் 23.20 வினாடிகளில் ஓடி இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தை பஹ்ரைனின் ஒடியோங் 22.96 வினாடிகளில் ஓடி கைப்பற்றினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
2018 ஆசிய விளையாட்டில் டுட்டீ சந்த் தன் இரண்டாவது வெள்ளியை பெற்றுள்ளார். முகம்மது ஏனாஸ், ஹீமா தாஸ் ஆகியோரும் தடகளத்தில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications