For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : ஈகுவெஸ்டேரியன் விளையாட்டில் இரண்டு வெள்ளி... இந்தியா அபாரம்

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஈகுவெஸ்டேரியன் விளையாட்டில் அணி மற்றும் தனிப் பிரிவு என இரண்டிலும் வெள்ளி வென்றுள்ளது இந்தியா. 1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின் இப்போது தான் ஈகுவெஸ்டேரியன் விளையாட்டில் இந்தியா பதக்கம் வெல்கிறது.

ஈகுவெஸ்டேரியன் தனிப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஃபோவாத் மிர்சா இரண்டாம் பிடித்து வெள்ளி வென்றார். முதல் இடத்தை ஜப்பானின் ஓய்வாவும், மூன்றாம் இடத்தை சீனாவின் ஹுஆ டியான்-உம் பிடித்தனர்.

Asian Games 2018 - Equestrian brought two silver medals for India on Day 8

ஈகுவெஸ்டேரியன் அணிப் பிரிவில் பங்கேற்ற இந்தியா அதிலும் வெள்ளி வென்றுள்ளது. அதில் இந்தியா சார்பாக ராகேஷ் குமார், ஆஷிஷ் மாலிக், ஜிதேந்தர் சிங், ஃபோவாத் மிர்சா ஆகியோர் பங்கேற்றனர். அணிப் பிரிவில் முதல் இடத்தை ஜப்பானும், மூன்றாம் இடத்தை தாய்லாந்தும் பிடித்துள்ளன.

ஃபோவாத் மிர்சா இரண்டு போட்டிகளிலும் பங்கேற்று இரண்டு வெள்ளிகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு இன்று இதுவே முதலில் கிடைக்கும் பதக்கங்களாகும். இந்த பதக்கங்களோடு சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

Story first published: Sunday, August 26, 2018, 13:22 [IST]
Other articles published on Aug 26, 2018
English summary
Equestrian brought two silver medals for India on Day 8 of the Asian games 2018.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+