ஆசிய விளையாட்டு : மகளிர் ரிலே ரேஸ் ஓட்டத்தில் இந்தியா தங்கம்...இந்தியாவின் 13வது தங்கம்
ஜகார்த்தா : இந்தியா இன்று 13வது ஆசியப் போட்டி தங்கத்தை வென்றுள்ளது. மகளிர் 4 x 400 மீட்டர் ரிலே ரேஸில் தங்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில் ஹீமா தாஸ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியில் அவர் பங்கு அதிகம். மற்ற மூவர் பூவம்மா, சரிதாபென், விஸ்மயா ஆவர்.
கலப்பு ரிலே ரேஸில் நேற்று முன்தினம் இந்தியா வெள்ளி வென்றது. அந்த போட்டியில் பஹ்ரைன் வீரர் ஹீமா தாஸ் முன்பு விழுந்ததால் சிறிய தாமதம் ஏற்பட்டது.

இந்த முறை சுதாரித்த இந்திய தடகள அணி, சிறந்த வீராங்கனையான ஹீமா தாஸை முதலில் ஓட வைத்தது. அவர் 30-40 மீட்டர் முன்னிலையில் தன் ஓட்டத்தை முடிக்க, அடுத்து ஓடிய வீரர்கள் அந்த முன்னிலையை தக்க வைக்கும் பணியை மட்டும் செய்தார்கள். இறுதியில் 3:28.72 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்த இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இரண்டாம் இடத்தை பஹ்ரைனும், மூன்றாம் இடத்தை வியட்நாமும் பிடித்தனர். இந்தியாவுக்கு இது 13வது தங்கப் பதக்கமாகும்.


Click it and Unblock the Notifications