Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : ஆடவர் ரிலே ரேஸ் ஓட்டத்தில் வெள்ளி…இந்தியாவின் 59வது பதக்கம்

ஜகார்த்தா : இந்திய ஆடவர் ரிலே ரேஸ் அணி வெள்ளி வென்றுள்ளது. இன்று மகளிர் ரிலே அணி தங்கம் வென்ற நிலையில், ஆடவர் அணி வெள்ளி வென்று தடகளத்தில் சாதித்துள்ளது.

ஆடவர் ரிலே அணியில் இந்தியா சார்பாக குன்ஹு முஹம்மது, தருண் அய்யாசாமி, முகம்மது ஏனாஸ், ஆரோக்யா ராஜீவ் ஆகியோர் அணியாக பங்கேற்றனர். இதில் முதலில் ஓடிய குன்ஹு, இரண்டாவது ஓடிய தருண் இருவரும் ஜப்பானுக்கு பின்னே மூன்றாம் இடத்தில் தங்கள் ஓட்டத்தை முடித்தனர். மூன்றாவது ஓடிய ஏனாஸ் மற்றும் நான்காவதாக ஓடிய ராஜீவ், ஜப்பானை முந்தி இரண்டாம் இடத்தை பிடிக்க காரணமாக இருந்தனர். முதல் இடத்தை கத்தார் பெற்றது.

Asian Games 2018 - India bags silver at men relay race

இந்தியா இன்று ஆடவர் 1500 மீட்டர், மகளிர் ரிலே ரேஸ் ஆகியவற்றில் தங்கம் வென்றது. மகளிர் டிஸ்கஸ் த்ரோ, மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்திலும் இரண்டு வெண்கலமும் வென்றது. இதையடுத்து, ஆடவர் ரிலே ரேஸில் இந்த வெள்ளி கிடைத்துள்ளது.

Story first published: Thursday, August 30, 2018, 20:29 [IST]
Other articles published on Aug 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+